ஃபின் ஆலன்
ஃபின் ஆலன்cricinfo

டி20 உலகக்கோப்பை| 33 பந்தில் 100 ரன்கள்.. 4 பிரமாண்ட சாதனைகள் படைத்த ஆலன்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 33 பந்தில் சதமடித்த ஃபின் ஆலன் 4 பிரமாண்ட சாதனைகளை படைத்து அசத்தினார்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 33 பந்தில் 100 ரன்கள் அடித்து 4 சாதனைகளை படைத்தார். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 170 ரன்களை 12.5 ஓவரில் 173/1 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

ஃபின் ஆலன்
ஃபின் ஆலன்

தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 170 ரன்களை இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 33 பந்தில் சதமடித்து அசத்தினார். வெறும் 12.5 ஓவரில் 173/1 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை நசுக்கி வெற்றிபெற்றது.

ஃபின் ஆலன்
ஃபின் ஆலன்

இந்தப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த ஃபின் ஆலன் 4 பிரமாண்ட சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

ஃபின் ஆலன்
கதகளி ஆடிய ஆலன்.. அதிவேக சதம்.. மிரண்டுபோன SA.. ஃபைனலுக்குள் நுழைந்த NZ!

4 பிரமாண்ட சாதனைகள்..

அதிக சிக்சர்கள்

நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 20 சிக்சர்களை அடித்திருக்கும் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். இரண்டாவது இடத்தில் 19 சிக்சர்களுடன் ஹெட்மயர் நீடிக்கிறார்.

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்

நேற்று நடைபெற்ற போட்டியில் 8 சிக்சர்களை அடித்த ஃபின் ஆலன், ஒரு உலகக்கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

அதிவேக சதம்

டி20 உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக 33 பந்தில் அடித்து ஃபின் ஆலன் வரலாறு படைத்தார்.

அதிக பவுண்டரிகள்

10 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என சேர்த்து மொத்தமாக ஒரு டி20 உலகக்கோப்பையில் 18 பவுண்டரிகளை அடித்த வீரராக சாதனை படைத்தார். 2012ஆம் ஆண்டு பிரெண்டன் மெக்கல்லம் படைத்த சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

ஃபின் ஆலன்
வெற்றியைக் கொண்டாடிய சஞ்சு சாம்சன்.. அரையிறுதியில் நீக்கம்?தடை விதிக்கும் ஐசிசி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com