விராட் கோலி
விராட் கோலிweb

கீழே விழுந்து கிடந்த தேசியக்கொடி.. கோலி செய்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு! #Video

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 0 ரன்களில் வெளியேறிய விராட் கோலி, 3வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் அடித்தார்..
Published on
Summary

விராட் கோலி, 3வது ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். போட்டி முடிந்தபின், தரையில் விழுந்த தேசியக் கொடியை உடனடியாக எடுத்து ரசிகரிடம் கொடுத்தார். இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி, கோலியின் நாட்டுப்பற்று பாராட்டப்படுகிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்குபிறகு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குபின் களத்திற்கு திரும்பிய விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்து உலகசாதனை படைத்த வீரர், முதல்முறையாக 2 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 0 ரன்னில் அவுட்டானது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரோகித் சர்மா - விராட் கோலி
ரோகித் சர்மா - விராட் கோலி

இந்த சூழலில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த கோலி 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்த, இரண்டு பேருக்கும் ஒரு தரமான கம்பேக்காக அமைந்தது அந்தபோட்டி.

இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு விராட் கோலி செய்த செயல் ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது..

விராட் கோலி
கவலை தரும் இந்தியாவின் பந்துவீச்சு.. உலகக்கோப்பைக்குள் சரிசெய்ய வேண்டிய 3 விசயங்கள்!

கோலி செயலுக்கு குவியும் பாராட்டு..

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டிரஸ்ஸிங் அறைக்கு செல்லும் வழியில் விராட் கோலி சிட்னி ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது ஒரு இந்திய ரசிகர் தேசியக் கொடியை தரையில் தவறவிட்டதை பார்த்த கோலி, உடனடியாக அதை எடுத்து ரசிகரின் கைகளில் கொடுத்தார்.

இந்த வீடியோவை சமூகவலைதளங்கில் பகிர்ந்துவரும் ரசிகர்கள், விராட் கோலி இந்திய கொடியை களத்திற்குள்ளே, வெளியே எங்கேயும் கீழே விழ அனுமதிப்பதில்லை என புகழ்ந்துவருகின்றனர்..

2 போட்டிகளில் டக் அவுட்டானது குறித்து பேசிய கோலி, “நேர்மையா சொல்லனும்னா, (தொடர்ச்சியான டக் அவுட்களுக்குப் பிறகு) உடனடியாக வெளியே வருவது மிகவும் நல்லது. நீங்க சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமா ரன்கள் அடிச்சிருந்தாலும், உங்களுக்கு இந்த ஆட்டம் எல்லாவற்றையும் உணர்த்தும். திடீர்னு உங்களால் ரன் அடிக்க முடியாமல் போகலாம், ஒவ்வொரு முறையும் இது சவாலாக இருக்கிறது. அதனால் தான் என்னால் என் சிறந்ததை எப்போதும் வெளியே எடுத்துவர முடிகிறது, அதனால் நான் கிரிக்கெட்டராக இருக்க அதிகமாக ஆசைப்படுகிறேன்” என்று பேசியுள்ளார்.

விராட் கோலி
கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி.. கோலிக்கு என்னாச்சு..?? சொதப்புவதற்கு என்ன காரணம்..??

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com