\
ashwin - sehwag - dhoni
ashwin - sehwag - dhonicricinfo

‘தோனியை விட.. சேவாக் தான் சிறந்தவீரர்’ அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்! இணையத்தில் வெடித்த Fans மோதல்!

அனைத்து வடிவங்களிலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், கோலியையும், தோனியையும் நிகாரித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

தோனி கேப்டன்சியால் சேவாக் வாய்ப்புகள் குறைந்ததாகும் பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசப்படும் சூழலில், அஸ்வின் ‘அனைத்து வடிவங்களிலும் சிறந்தவர்’ பட்டியலில் தோனியை விட சேவாக்கை தேர்வு செய்தது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தோனி, கோலி, ரோகித் ரசிகர்கள் அஸ்வினை விமர்சிக்க, சேவாக் ரசிகர்கள் சதங்கள், ஸ்ட்ரைக் ரேட் போன்ற புள்ளிவிவரங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் கடும் வாதப்பிரதிவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியா முதல்முறையாக கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற 1983 உலகக்கோப்பை அணி வீரர்களின் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் வீரர்களின் இந்த சந்திப்பின் போது, இவ்வளவு வருடங்கள் கடந்தும் அனைத்து வீரர்களும் நண்பர்களாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறார்கள்; பார்க்க நன்றாக இருக்கிறது என பாராட்டப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் 2011 உலகக்கோப்பையை வென்ற வீரர்களின் சந்திப்பு நடத்தினால், ஒவ்வொரு வீரர்களும் அடித்துக்கொள்வார்கள் என விமர்சிக்கப்பட்டது.

SPORTSTIME247 / Middle Stump Cricket

அந்தவகையில் தான் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த வீரர்கள், பொதுவெளியில் மற்ற வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இதனால் அந்தந்த வீரர்களின் ரசிகர்களிடையே மோதல்கள் தொடர்ந்து இருந்துவருகின்றன.

2007-ல் தொடங்கிய சேவாக் - தோனி ரசிகர்கள் மோதல்!

தோனி, சேவாக் இருவரும் நேரடியாக எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததில்லை என்றாலும், தோனி-சேவாக் ரசிகர்கள் இடையேயான மோதலானது 2007ஆம் ஆண்டுமுதல் இருந்துவருகிறது. 2007-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சேவாக்குக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராபின் உத்தப்பாவிற்கு தோனி வாய்ப்புகளை வழங்கினார். அப்போது மூத்த வீரர்கள் களத்தில் மெதுவாக ஓடுவதால் பவுண்டரி எல்லைகளில் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தோனி செய்தியாளர் சந்திப்பில் காரணம் கூறினார்.

அடுத்த போட்டியிலேயே சிறப்பாக ஃபீல்டிங் செய்துவிட்டு பேசிய சேவாக், "நாங்கள் மெதுவான ஃபீல்டர்கள் என்று தோனி எங்களிடம் ஒருமுறை கூட கூறவில்லை" என ஊடகங்களில் வெளிப்படையாகப் பேசினார். இது அப்போதே ரசிகர்களிடையே பெரும் பிரிவினையை ஏற்படுத்தியது.

சேவாக் - தோனி
சேவாக் - தோனி
ashwin - sehwag - dhoni
'தோனியால் மன உளைச்சலுக்கு ஆளானேன்; முன்பே ஓய்வுபெற்றுவிடலாம் என யோசித்தேன்' - சேவாக் ஓபன் டாக்!

அதுமட்டுமில்லாமல் ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு சேவாக் அணியின் முக்கிய கேப்டன்சி ரேஸில் இருந்தார். ஆனால் 2007 டி20 உலகக்கோப்பையை தோனி வென்ற பிறகு, அவர் அனைத்து வடிவங்களுக்கும் கேப்டனாக்கப்பட்டார். இதனால் தோனியால் தான் சேவாக் கேப்டனாகும் வாய்ப்பை இழந்தார் என சேவாக்கின் சிலதரப்பு ரசிகர்கள் கருதினர்.

அதுமட்டுமில்லாமல் 2011 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் சேவாக் இடம்பெறுவாரா என்ற குழப்பமே அப்போது இருந்தது, ஏனென்றால் அப்போது தோனியின் அணியில் சேவாக்கிற்கு வாய்ப்பு எப்போதாவது தான் வழங்கப்பட்டது. அதிலும் சேவாக்கிற்கு மாற்றாக எடுக்கப்பட்ட வீரர்கள் சொதப்பிய பிறகு தான் சேவாக்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ரன்களை குவித்துதான் சேவாக் 2011 உலகக்கோப்பைக்கான தேர்வில் இடம்பெற்றிருந்தார்.

இந்தசூழலில் தான் தோனியின் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, ‘தனக்கு அணியில் முக்கியத்துவம் இல்லை, நான் ஓய்வுபெறப்போகிறேன்’ என்று சச்சினிடம் புலம்பியதாக சேவாக்கே ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி தோனி - சேவாக் ரசிகர்களிடையேயான மோதல் எப்போதும் இருந்துவருகிறது.

ashwin - sehwag - dhoni
பவுலர்களுக்கு செய்யுற துரோகம்.. இலங்கையிடம் கோட்டைவிட்டது எப்படி? கம்பீர் மீது பகீர் குற்றச்சாட்டு!

அதிர்ச்சி கொடுத்த அஸ்வின் பதில்!

இந்நிலையில் மீண்டும் இவ்விரு ரசிகர்களிடையே மோதலை பற்றவைக்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வினின் பதில் இடம்பெற்றுள்ளது. அனைத்து வடிவங்களிலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், தோனியா? சேவாக்கா? என்ற இடத்தில் தோனியை தவிர்த்துவிட்டு சேவாக்கை தேர்வுசெய்துள்ளார். அதேபோல கோலியையும் அவர் தேர்வுசெய்யவில்லை. கோலிக்கு பதிலாக பும்ராவை அவர் தேர்வுசெய்தார். இறுதி 2 பெயர்களாக கபில்தேவ், சச்சின் இருந்த நிலையில், அனைத்து வடிவங்களில் சிறந்த வீரராக சச்சினை தேர்வுசெய்தார் அஸ்வின்.

இந்தசூழலில் தான் தோனிக்கு பதிலாக சேவாக்கை தேர்வுசெய்ததற்கு தோனியின் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தோனியை விட கோலி சிறந்தவர் என்று கூறியிருந்தால் கூட ஒப்புக்கொண்டிருப்பேன், சேவாக்கை எப்படி இவர் தோனியை விட சிறந்தவர் என்று கூறினார் என ஒரு தோனியின் ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல ஒருவர் தோனியை விட சேவாக் சிறந்த வீரரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சேவாக்கின் ரசிகர்கள் புள்ளிவிவரங்களுடன் தோனியை விட அதிக சதங்கள், முச்சதம் எல்லாம் சேவாக் அடித்திருப்பதாகவும், அனைத்து வடிவங்களிலும் தோனியை விட சேவாக் சிறந்தவர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கோலி மற்றும் ரோகித் ரசிகர்களும் அஸ்வினின் தேர்வை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ashwin - sehwag - dhoni
டிராவிட், சேவாக் மகன்கள் தேர்வு! நீக்கப்பட்ட சூர்யவன்ஷி.. என்ன காரணம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com