\
dale steyn
dale steynweb

கோப்பை வென்றுவிடுங்கள்.. இல்லையென்றால் நீங்க தான் 'CHOKERS'! - டேல் ஸ்டெயின் எச்சரிக்கை

எல்லோரும் தென்னாப்பிரிக்காவை சோக்கர்ஸ் என்று அழைக்கிறார்கள் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோதல் நடைபெறவுள்ளது. முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின், நியூசிலாந்து கோப்பை வெல்ல வேண்டும், இல்லையெனில் 'CHOKERS' பட்டம் அவர்களுக்கு வழங்கப்படும் என எச்சரித்துள்ளார். இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய மோதலில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

ஐசிசி தொடர் என்றாலே இந்தியாவை அச்சுறுத்தும் அணியாக நியூசிலாந்து இருந்துவரும் நிலையில், 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட அடிக்கும், சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கும் இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி குறித்து பேசியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின், நியூசிலாந்து அணி கோப்பை வெல்லவேண்டும் என கூறியுள்ளார்.

dale steyn
அரையிறுதியில் அபார பந்துவீச்சு.. புதிய மைல்கல் சாதனையை எட்டிய பும்ரா!

இனி நியூசிலாந்துதான் சோக்கர்ஸ்..

ஏபி டி வில்லியர்ஸ் உடனான யூடியூப் உரையாடலில் பேசியிருக்கும் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின், "எல்லோரும் தென்னாப்பிரிக்காவை CHOKERS என அழைக்கின்றனர். ஆனால் நியூசிலாந்து ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. எங்களை விட அவர்கள்தான் அதிகமுறை இறுதி போட்டியில் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

இந்த முறையாவது டி20 உலக கோப்பையை வெல்லுங்கள். இல்லையெனில் CHOKERS என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுத்து விடுவோம்” என கூறினார்.

மேலும், ”நான் நியூசிலாந்தை நேசிக்கிறேன், அவர்கள் வெல்லவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இந்தியாவை வீழ்த்துவார்களா என்று கேட்டால்? இல்லை. அதற்கு இந்தியாவிடமிருந்து ஒரு பெரிய சோக் தேவை. அது சாத்தியமற்றது என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

dale steyn
”இந்தியா ஃபைனலுக்கு போகாது” - ஆருடம் சொன்ன பாக். வீரரைச் சாடிய சித்து!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com