பேட்டிங் செய்யும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் மறுபிரவேசம்.. இந்திய அணியிலும் புது மாற்றம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகளுடன் இரண்டாவது போட்டியை இந்தியா தன் வசமாக்கியது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களம் என்பதால், இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் களம் இறங்கியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். முன்னதாக, 2021 பிப். 24ல் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாடியதே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக இருந்தது. இதேபோல் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா களம் இறங்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கிறது. டாஸ் வென்று பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீசப்போவதாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், “இந்த ஆட்டத்திற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எல்லோரும் லார்ட்ஸில் விளையாடுவதை விரும்புகிறார்கள். நீங்கள் அந்த அனுபவத்தை ரசிக்க வேண்டும். அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. டங்கிற்கு பதிலாக ஆர்ச்சர் வந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
கடந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு கடும் சவால் அளித்த நிலையில், இந்த முறை அந்த அணி வெற்றிக்காக போராடும். அதே நேரம், 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணியும் களம் காண உள்ளது.
வீரர்கள் விபரம்:
இங்கிலாந்து அணி:
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்
இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்