Delhi Capitals historic ipl record 2026 Vs RCB
rcbx page

6 ஓவரில் 6 விக்கெட்.. ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த DC.. எளிதில் வெற்றிபெற்ற RCB!

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சரிவு ஆரம்பமானது.
Published on

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணியாகவும் டெல்லி சாதனை படைத்துள்ளது. அது 6 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தகட்டத்துக்கு அணிகள் முன்னேறும் வகையில் வேகம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சரிவு ஆரம்பமானது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே சாஹில் பராக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபில் தொடரில் முதல் ஓவரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் ட்ரெண்ட் போல்ட் (32) முதல் இடத்தில் உள்ள நிலையில், புவனேஷ் குமார் (29) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Delhi Capitals historic ipl record 2026 Vs RCB
புவனேஷ் குமார்bcci

ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே கே.எல்.ராகுல் 1 ரன்னில் வெளியேற, அதே ஓவரில் சமீர் ரிஸ்வியும் டக்-அவுட் முறையில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். மீண்டும் 3ஆவது ஓவரை வீசிய புவனேஷ் குமார், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரையும் காலி செய்தார். அடுத்து 4ஆவது ஓவரில் நிதிஷ் ராணாவை காலி செய்தார் ஹேசில்வுட். இதன்மூலம் அந்த அணி வெறும் 4 ஓவர்களுக்குள் 6 விக்கெட்களை இழந்திருந்தது. குறிப்பாக, டெல்லி அணியின் முதல் 6 பேட்டர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்களின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே. இது 2011-இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணி செய்த சாதனையைத் தொடர்ந்து 2-வது மிகக்குறைந்த ஸ்கோராகப் பதிவாகியுள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணியாகவும் டெல்லி சாதனை படைத்துள்ளது. அது 6 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது.

Delhi Capitals historic ipl record 2026 Vs RCB
‘கருண் நாயர் அல்ல.. DC-ன் தோல்விக்கு கேஎல் ராகுல் தான் காரணம்..’ முன்னாள் வீரர் சொன்ன காரணம்..?

இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் பவர்பிளேக்குள்ளேயே இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஹேசில்வுட் 3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Delhi Capitals historic ipl record 2026 Vs RCB
ஹேசில்வுட்bcci

எனினும், அதற்குப் பின் களமிறங்கிய அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து நின்றதுடன், 49 ரன்களைக் கடக்கவும் உதவினர். காரணம், ஐபிஎல் வரலாற்றிலேயே ஓர் அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் இதுதான். இறுதியில் அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 75 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிபட்சமாக அபிஷேக் போர்ல் 30 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்களையும், புவனேஷ்குமார் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் எளிமையான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 6.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 77 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. விராட் கோலி (23*) மற்றும் தேவ்தத் படிக்கல் (34*) இருவரும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Delhi Capitals historic ipl record 2026 Vs RCB
CSK or DC..? ஃபிளெமிங் vs பதானி மோதலில் யாருக்கு வெற்றி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com