ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராweb

அரையிறுதியில் அபார பந்துவீச்சு.. புதிய மைல்கல் சாதனையை எட்டிய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல்கல் சாதனையை எட்டி அசத்தினார்.
Published on
Summary

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா 253 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பும்ரா 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் புதியமைல்கல்லை எட்டியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. 

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் 89 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 253 ரன்கள் குவித்தது.

பும்ரா
பும்ரா

254 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றபோதும் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியின் இளம்வீரர் பெத்தெல் 48 பந்தில் 105 ரன்கள் அடித்து மிரட்டினார். கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

4 ஓவரில் வெறும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஜஸ்பிரித் பும்ரா
”ஆட்டநாயகன் விருதை பும்ராவிற்கு தான் கொடுக்கணும்..” - சஞ்சு சாம்சன் புகழாரம்

புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணி
இந்திய அணி

இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், 94 டி20 போட்டிகளில் 117 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ். ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் போன்ற புகழ்பெற்ற பந்து வீச்சாளர்களுடன் இந்த சாதனையை எட்டிய எட்டாவது இந்தியராக சாதனை படைத்தார் பும்ரா.

ஜஸ்பிரித் பும்ரா
“பும்ரா 100 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பவுலர்..” - முன்னாள் ஜாம்பவான் புகழாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com