பெங்களூரில் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்
பெங்களூரில் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்web

’80 ஆயிரம் இருக்கை வசதி..’ தென்னிந்தியாவில் வரும் 2-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்!

தமிழகத்திற்கு மிக அருகில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவிருக்கிறது.
Published on

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் தமிழகத்துக்கு மிக அருகிலேயே அமையப்போகிறது. ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமையவுள்ள ஸ்டேடியம் தென்னிந்தியாவில் அமையப்போகிறது. எங்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்...

பெங்களூரில் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்
இங்கிலாந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

80ஆயிரம் பேர் அமரும் வகையில் ஸ்டேடியம்..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம். இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானமாக உள்ள இங்கு சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளைக் காண முடியும். அதற்கு அடுத்தபடியாக இருப்பது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானம். உலக அளவில் மூன்றாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் இங்கு சுமார் 68,000 பார்வையாளர்கள் அமர முடியும். தற்போது இதை பின்னுக்குத் தள்ள உள்ளது தென்னிந்தியாவில் அமையவுள்ள புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று. ஆம். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பொம்மசந்திராவில் சுமார் 80ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டி எழுப்பப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக 300 கோடி ரூபாய் நிதியை கர்நாடக அரசு ஒதுக்கியிருக்கிறது.

கிரிக்கெட் ஸ்டேடியம்
கிரிக்கெட் ஸ்டேடியம்

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த கிரிக்கெட் மைதானம் இந்த ஜெனரேசனுக்கு ஏற்ற அதிநவீன வசதிகளுடனும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தரத்துடனும் கட்டமைக்கப்பட உள்ளது. ஏற்கெனவே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்திற்கு மாற்றாக இந்த புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தால், மாநிலத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் ஸ்டேடியம்
கிரிக்கெட் ஸ்டேடியம்

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ சிட்டி பெங்களூருவின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் நிச்சயம் ஒரு உந்துதலாக இருப்பதோடு, சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதும், பெங்களூரு சர்வதேச அளவில் ஒரு முக்கிய விளையாட்டு மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்
அது ’தல’ கூடவே பொறந்தது.. அனிருத், ருதுராஜ் வசனம் + கூலி பாடல்.. தோனியின் மாஸ் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com