அது ’தல’ கூடவே பொறந்தது.. அனிருத், ருதுராஜ் வசனம் + கூலி பாடல்.. தோனியின் மாஸ் வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பின்னணி இசை அனிருத் என ஒரு மாஸ் காம்போவில் உருவாகியிருக்கும் படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்கான புக்கிங் தற்போது ஓப்பனாகி உள்ள நிலையில், புக்கிங்கில் சாதனை படைத்துவருகிறது கூலி.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கூலி திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தல தோனிக்கு ரஜினியின் கூலி பாடலை எடிட் செய்து மாஸ்ஸாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது 7பெடல். இந்த வீடியோ அனிருத் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் வசனத்துடன் இடம்பெற்றிருப்பதுதான் கூடுதலாக கவனம் பெற்றுள்ளது.
’தல’க்கு ஸ்டைலும், பவரும் அப்படியே இருக்குல..
7பெடல் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், கூலி திரைப்படத்தின் பவர் ஹவுஸ் பாடல் பின்னால் ஒலிக்கிறது. ”டபுள் vs சிங்கிளா” என்ற வசனத்துடன் அனிருத் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு பேருக்கு எதிராகவும் தோனி தனியாளாக பேடல் விளையாடுகிறார்.
தோனிக்கு எதிராக பேடல் விளையாடும் அனிருத் சோர்வாகி இருக்கும் போது, உதவி வேண்டுமா என ருதுராஜ் கெய்க்வாட் கேட்கிறார். அப்போது கேப்டன் டபுள் vs சிங்கிளா என அனிருத் கூற, தோனி சிரிக்கிறார் (பின்னணியில் முடிச்சிடலாமா என்ற ரஜினியின் குரல் ஒலிக்கிறது).
தொடர்ந்து கூலி பவர் ஹவுஸ் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, கேப் தல’க்கு இன்னும் ஸ்டைலும் பவரும் குறையவே இல்லல என அனிருத் கூற, அது கூடவே பொறந்தது என ருதுராஜ் கெய்க்வாட் கூறுகிறார். இந்த ஆட்டம் போதுமா குழந்த என ரஜினியின் குரலுடன் முடிகிறது அந்த வீடியோ. தற்போது இந்த வீடியோவை தல தோனியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.