பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் கைது
பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் கைதுweb

இங்கிலாந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாகிஸ்தானின் 24 வயது கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Published on

பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட பல நாடுகள் தயக்கம் காட்டுவது, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவிதமான வடிவத்திலும் விளையாட மறுப்பது என தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்ச்சைகளுக்குள் இருந்துவருகிறது.

இந்த சூழலில் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் ஏ அணியில் இடம்பிடித்திருந்த ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருப்பது மேலும் விமர்சனத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் கைது
அது ’தல’ கூடவே பொறந்தது.. அனிருத், ருதுராஜ் வசனம் + கூலி பாடல்.. தோனியின் மாஸ் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது..

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்த 24 வயது இளம்வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் பாலியல் குற்றாச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தான் வம்சாவளியை கொண்ட பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த சம்பவம், ஜுலை 23-ம் தேதி நடந்துள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, “2025 ஆகஸ்டு 4-ம் தேதி திங்கட்கிழமை ஒரு பாலியல் வன்கொடுமை புகாரைப் பெற்ற பிறகு, 24 வயது இளைஞர் ஹைதர் அலியை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்த சம்பவம் ஜூலை 23, 2025 புதன்கிழமை மான்செஸ்டரில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

புகாரின் பேரில் ஹைதர் அலியை கைதுசெய்த காவல்துறை, விசாரணை தொடங்கிய பிறகு ஜாமீனில் வெளியில் விட்டுள்ளனர். அவருடைய பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், "கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி மீது கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தற்போது நடத்தி வரும் குற்றவியல் விசாரணை குறித்து பிசிபிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பானது.

பிரிட்டனின் சட்ட நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை PCB முழுமையாக மதிக்கிறது மற்றும் விசாரணையை சரியான நேரத்தில் நடத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறது. அதன்படி, ஹைதர் அலியை தற்காலிக இடைநீக்கம் செய்ய PCB முடிவு செய்துள்ளது, இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

haider ali
haider ali

பாகிஸ்தானின் வலது கை பேட்ஸ்மேனான ஹைதர் அலி, பாகிஸ்தானுக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 35 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.அ

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் கைது
தொப்பியால் வந்த சோதனை! அவுட்டா? நாட் அவுட்டா? என கிளப்பிய விவாதம்! விதிகள் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com