இங்கிலாந்து
இங்கிலாந்துcricinfo

5வது டெஸ்ட் | கேப்டன் ’பென் ஸ்டோக்ஸ்’ விலகல்.. 4 மாற்றங்கள் செய்த இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடவிருக்கும் 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடிவருகிறது.

முதல் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் இந்தியா களம்காண உள்ளது.

இங்கிலாந்து - இந்தியா
இங்கிலாந்து - இந்தியா

கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் நடக்கவிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 4 மாற்றங்களை செய்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து
0.5 சதவீதமாக குறைந்த வேகம்.. எச்சரித்த மருத்துவக்குழு.. பும்ராவிற்கு 5வது டெஸ்ட்டில் ஓய்வு!

இளம்திறமை ஜேக்கப் பெத்தலுக்கு வாய்ப்பு..

இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயத்தால் கடைசி டெஸ்ட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அணியில் 4 மாற்றங்களை செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்த உள்ளார். அணியில் புதிய வீரராக இளம் திறமை ஜேக்கப் பெத்தல் இடம்பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து, வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கார்ஸ், சுழற்பந்துவீச்சாளர் டவ்சன் முதலியோர் அணியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

5வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்

இங்கிலாந்து
’நாடு தான் முக்கியம்..’ அரையிறுதியில் IND vs PAK மோதல்.. ஸ்பான்சரில் இருந்து விலகிய இந்திய நிறுவனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com