குர்ஜப்னீத் சிங், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா
குர்ஜப்னீத் சிங், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா pt web

‘CSK ரசிகர்கள் சந்தோஷப்படறதா? வருத்தப்படறதா?’ - ஒரே போட்டியில் குழப்பத்தை பரிசளித்த ஹர்திக் பாண்டியா

சையத் முஸ்தாக் அலி தொடரில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதிய போட்டியில், பரபரப்பான இறுதி நிமிடங்களில் பரோடா அணி வெற்றி பெற்றது.
Published on

சையத் முஸ்தாக் அலி கோப்பையில் நேற்று பரோடாவும் தமிழ்நாடு அணியும் மோதின. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபா இந்திரஜித் மற்றும் நாராயண் ஜெகதீசன் அதிரடியாக ஆடினர். 14 பந்துகளில் பாபா இந்திரஜித் 25 ரன்களையும், ஜெகதீசன் 32 பந்துகளில் 57 ரன்களையும் குவித்தனர். பின் வந்த தமிழ்நாடு அணியின் கேப்டன் ஷாருக்கான் சற்றே நிதானமாக ஆடி 39 ரன்களைக் குவிக்க, ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியில் ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ள விஜய் சங்கர் 22 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17 ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்திருந்தது.

222 ரன்கள் எனும் மெகா இலக்கைக் கொண்டு களமிறங்கிய பரோடா அணியில் தொடக்கத்தில் விக்கெட்கள் வேகமாக விழுந்தன. வருண் சக்கரவர்த்தி பந்தில் நினந் ரத்வா மற்றும் ஷிவாலிக் ஷர்மா போன்றோர் நடையைக் கட்டினர். பின் வந்த பானு பானியா அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். ஆனால், எட்ட வேண்டுய இலக்கு கடலளவு இருந்தது.

குர்ஜப்னீத் சிங், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா
“சச்சின், ட்ராவிட், கங்குலி சொன்னதைகூட கேட்கவில்லை” கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் ப்ரித்வி ஷா..!

பரோடா அணியில் ஆறாவது பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்தபோது 44 பந்துகளில் அந்த அணிக்கு 101 ரன்கள் தேவைப்பட்டது. வந்ததில் இருந்தே பொளக்கத் தொடங்கினார் ஹர்திக். மொத்தமாக 30 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார் ஹர்திக். இதில், 7 சிக்சர்கள் அடக்கம். ஆனால், அதில் 4 சிக்சர்கள் 17 ஆவது ஓவரை விசிய குர்ஜப்னீத் சிங்கிடம் இருந்து மட்டுமே கிடைத்தது. இந்த ஓவருக்கு முன்பு வரை அந்த அணிக்கு 24 பந்துகளில் 66 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் மட்டும் பரோடா அணி 30 ரன்களைக் குவித்து வெற்றி இலக்கில் வேகமாக முன்னேறியது. குர்ஜப்னீத் சிங் சமீபத்தில் சென்னை அணியில் 2.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் ரன் அவுட் ஆனாலும், பரபரப்பான இறுதிப் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது பரோடா அணி. ஆட்டத்தின் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை அணியின் பேட்ஸ்மேனுக்கு ரன்களை வாரிக்கொடுத்த ஹர்திக் பாண்டியா, சென்னை அணியின் பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கைப் பொளந்துகட்டினார். அந்த ஓவரில் மட்டும் 29 ரன்களைக் குவித்தார்.

குர்ஜப்னீத் சிங், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா
அரசியல் சாசன புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி பதவியேற்பு.. எம்.பி. ஆனார் பிரியங்கா காந்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com