பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திகோப்புப்படம்

அரசியல் சாசன புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி பதவியேற்பு.. எம்.பி. ஆனார் பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி இன்று எம்பியாக பதவியேற்றார்.
Published on

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி இன்று எம்.பி.யாக பதவியேற்றார். அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி. இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்திக்குப் பிறகு நேரு குடும்பத்தில் இருந்து வரும் மூன்றாவது பெண் எம்பி பிரியங்கா காந்தி.

PriyankaGandhi
PriyankaGandhi

காலை 11 மணிக்கு அவையில் நிகழ்வுகள் தொடங்கியதும் பிரியங்கா காந்தி மற்றும் நாண்டெட் தொகுதி இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த் ராவ் சவான் என இருவரும் பதவியேற்றனர்.

பிரியங்கா காந்தி
இந்திய பேட்ஸ்மேன்கள், வெளிநாட்டு பௌலர்கள்... மும்பை இந்தியன்ஸின் புதிய லெவன் எப்படி இருக்கும்?

வயநாடு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி ஏறத்தாழ 6 லட்சத்து 22 ஆயிரம் வாக்குகளைப் பெற்று, கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். முதன்முறையாக மக்களவையில் நுழையும் பிரியங்கா காந்தி, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கான சிறப்பு தொகுப்பு தாமதம் ஆவது குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு பிரியங்கா காந்தி வந்தபோது, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி வாசலில் இருந்து பிரியங்கா காந்தியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பிரியங்கா காந்தியின் குடும்பத்தாரும் பார்வையாளர்கள் பாடத்தில் இருந்து பிரியங்கா காந்தி பதவியேற்றதைக் கண்டனர். பதவியேற்புக்கு, கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்து வந்திருந்தார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
‘அசைவத்திற்கு NO.. எப்போதும் சண்டை..’ காதலன் கொடுமையால் கோரக்பூர் முதல் பெண் விமானி விபரீத முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com