விராட் கோலி
விராட் கோலிpt web

‘Clown Kohli’ விமர்சிக்கும் ஆஸ்திரேலிய ஊடகம்... இடைநீக்கம் செய்ய வேண்டும்..?

The West Australian நாளிதழ் தனது கடைசிப் பக்கத்தில், விராட் கோலியை விமர்சிக்கும் ரீதியில் ‘Clown Kohli’ என்றும் ‘sook’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Published on

பார்டர் - காவஸ்கர் தொடரின் 4வது போட்டி, மெல்போர்னில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர்.

virat kohli fined for his physical altercation with sam konstas
விராட்கோலி, கான்ஸ்டாஸ்எக்ஸ் தளம்

இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சிதறடித்து, சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனிடையே கான்ஸ்டாஸுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலி
’தட்டிக்கொடுக்க வேண்டிய நீங்களே..’ ஃபேவரட் வீரராக கோலியை தேர்வுசெய்த கான்ஸ்டாஸ்..!

மைதானத்தில், கான்ஸ்டாஸ் நடந்து சென்றபோது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். அனுபவம் வாய்ந்த வீரரான கோலி அறிமுக வீரரான கான்ஸ்டாஸ் தோளில் வேண்டுமென்றே இடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.

விராட் கோலியை விமர்சிக்கும் ஆஸி. ஊடகங்கள்
விராட் கோலியை விமர்சிக்கும் ஆஸி. ஊடகங்கள்

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழான The West Australian, நாளிதழின் கடைசிப் பக்கத்தில் கோலியை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. ‘Clown Kohli’ என ஆஸ்திரேலிய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘sook’ என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ‘sook’ என்பதன் பொருள் கோழை அல்லது அழும்குழந்தை என்பதாகும். பல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கோலியை ஐசிசி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

நேற்றைய நாள் முடிவில் இதுதொடர்பாக பேசிய கான்ஸ்டாஸ், “நான் எனது கையுறைகளை சரிசெய்து கொண்டிருந்தேன், அவர் தற்செயலாக என்னை மோதிவிட்டார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி
34வது டெஸ்ட் சதம்.. இந்தியாவிற்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை! 474 ரன்கள் குவித்த ஆஸி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com