\
aus vs sa
aus vs saproteasmen

99 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா.. தென்னாப்பிரிக்கா தரமான பதிலடி!

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
Published on: 
Summary

கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 425 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை 99 ரன்னுக்கு சுருண்டது. மார்கோ யான்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியதுடன், டிராவிஸ் ஹெட் 87 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியிலிருந்து காப்பாற்ற போராடி வருகிறார்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

aus vs sa , temba bavuma
aus vs sa , temba bavumax

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹாவில் உள்ள புனித ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

aus vs sa
சோத்துலையும் அடி.. சேத்துலையும் அடி! பாகிஸ்தானிடம் மீண்டும் சரணடைந்த இலங்கை!

அணியை மீட்டெடுத்த டெம்பா பவுமா!

முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 92 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், தனியாளாக போராடிய கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் குவித்து அணியை மீட்டு எடுத்துவந்தார்.

அவரைத்தொடர்ந்து கடைசியாக வந்து மார்கோ யான்சன் 85 ரன்களும், சைமன் ஹார்மர் 82 ரன்களும் அடிக்க 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா டிக்ளார் செய்தது.

aus vs sa
புவனேஷ்வருக்கு 'T20-ல் எப்படி ஆதிக்கம் செலுத்துவது' என்று தெரியும்! - ஸ்ரேயாஸ் ஐயர்

99 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 99 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. அற்புதமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் அடித்தார்.

ஃபால்லோவ் ஆன் பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடிய நிலையில், 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 156 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. எப்போதும் ஆஸ்திரேலியாவின் ஆபத்பாந்தவனாக செயல்படும் டிராவிஸ் ஹெட் 87 ரன்கள் அடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார்.

aus vs sa
92/5 விக்கெட்.. தனியாளாக 179 ரன்கள் குவித்த பவுமா! 425 ரன்கள் குவித்த SA!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com