\
aus vs sa , temba bavuma
aus vs sa , temba bavumax

92/5 விக்கெட்.. தனியாளாக 179 ரன்கள் குவித்த பவுமா! 425 ரன்கள் குவித்த SA!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா 179 ரன்கள் விளாசினார்.
Published on: 
Summary

தென்னாப்பிரிக்கா 92/5 என தடுமாறிய நிலையில், கேப்டன் பவுமாவின் 179 ரன்கள் மற்றும் யான்சன், ஹார்மர் ஆகியோரின் பங்களிப்பால் 425 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்டது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் விளையாடிவருகின்றன. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 92 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், தனியாளாக போராடிய கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் குவித்து அணியை மீட்டு எடுத்துவந்தார்.

அவரைத்தொடர்ந்து கடைசியாக வந்து மார்கோ யான்சன் 85 ரன்களும், சைமன் ஹார்மர் 82 ரன்களும் அடிக்க 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா டிக்ளார் செய்தது.

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து பேட்டிங் விளையாடிவரும் ஆஸ்திரேலியா 3 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

aus vs sa , temba bavuma
முதல் டெஸ்ட்| ரென்ஷா மாஸ்டர் கிளாஸ்.. ஹசல்வுட் 5-fer.. தென்னாப்ரிக்காவை நசுக்கிய ஆஸி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com