"WCFinal: Aus 450/2.. Ind 65/10" - மிட்சல் மார்ஸின் பழைய கணிப்பை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் தெரிவித்த கணிப்பு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மிட்சல் மார்ஷ்
மிட்சல் மார்ஷ்twitter

ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவந்த ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் நிறைவுபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

இதையடுத்து இரு அணிகளும், 20 ஆண்டுகளுக்குப் பின் மோத இருப்பதால், பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் நவம்பர் 19ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதையும் படிக்க: WC Final: சுழலில் திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு வாய்ப்பு? மாற்றம் செய்யும் ரோகித்?

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் கடந்த மே மாதம் அளித்த பேட்டி ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சமயத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வந்தது. அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியவர் மிட்சல் மார்ஷ்.

அப்போது அவரிடம், ’நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும். ஆனால், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுக்கும். பின்னர், களமிறங்கும் இந்தியா 65 ரன்களில் ஆட்டமிழக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”கோலியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது”- பகைக்கு இடையே மனம்திறந்து பாராட்டிய சவுரவ் கங்குலி!

மேலும், “இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை பெறாத அணியாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டதுபோல், நடப்பு உலகக்கோப்பையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பைனலில் மோத இருக்கின்றன. எனினும், இந்தத் தொடரில் தோல்வியே பெறாத அணியாக இந்தியாதான் வலம் வந்துள்ளது. மாறாக, ஆஸ்திரேலியா லீக் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

மேலும், 450 ரன்கள் குறித்து மார்ஷ் பேசியது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ’இந்தியாதான் 450 ரன்கள் குவிக்கும்; ஆஸ்திரேலியா 65 ரன்களில் ஆட்டம் இழக்கும் என்று மார்ஸின் பழைய கணிப்பை பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் மார்ஸ், இந்த கணிப்பை ஒரு நகைச்சுவையாகத்தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”டாஸ் போடும்போது பிக்சிங் செய்கிறார் ரோகித்” - பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com