சுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின்
சுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின்web

'கில்லின் மோசமான கேப்டன்சி.. 5-0 என தோற்றது போல இருந்தது' - விமர்சித்த அஸ்வின்

சுப்மன் கில் தன்னுடைய கேப்டன்சியில் ஒரு போட்டியின் தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் அதே தவறை செய்வதாக அஸ்வின் குற்றஞ்சாட்டியுள்ளார்..
Published on
Summary

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 2-1 என ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது. கேப்டன்சியில் கில் பல தவறுகளை செய்ததாகவும், முன்னாள் வீரர் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பவுலர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தாதது மற்றும் முந்தைய போட்டியிலிருந்து கற்றுக்கொள்ளாதது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை 2-1 என இழந்து படுதோல்வியை சந்தித்தது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 1988ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து. அதிலும் தொடரை நிர்ணயிக்கும் டிசைடர் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்பது இதுவே முதல்முறை.

கம்பீர் - சுப்மன் கில்
கம்பீர் - சுப்மன் கில்

இந்த தொடர் முழுவதும் இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் கேப்டன்சி மோசமானதாகவே இருந்தது, அவரால் அழுத்தமான நேரத்தில் என்ன செய்வது, எந்த பவுலரை எப்போது பவுலிங்கிற்கு கொண்டுவருவது என்ற தடுமாற்றம் அதிகமாக இருந்தது. இது எல்லாம் இளம் கேப்டன் எதிர்கொள்வது தான் என்றாலும், இரண்டாவது போட்டியில் செய்த தவறிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை எனவும், 3வது ஒருநாள் போட்டியிலும் அதையே செய்ததாகவும் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

சுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின்
ஒரே போட்டி.. 3 ஜாம்பவான்களின் சாதனை காலி.. விராட் கோலியின் முரட்டு சம்பவம்!

மோசமான கில் கேப்டன்சி..

தன்னுடைய ஆஷ் கி பாத் யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், ”நியூசிலாந்து அணி இந்தியாவை 5-0 என தோற்கடித்தது போல இருந்தது. அவர்கள் முதல் போட்டியிலும் வெற்றி பெறும் இடத்திலேயே இருந்தனர். இந்திய அணியின் தரம் குறித்த கவலை தற்போது அதிகரிக்கிறது. கடந்த காலங்களில் அழுத்தமான நேரத்தில் எப்படி செயல்படவேண்டும் என்ற வழியை கண்டுபிடித்து இந்திய அணி வெற்றிபெற்றது.

சுப்மன் கில் கேப்டன்சியில் முந்தைய போட்டியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ஜடேஜா, குல்தீப் யாதவை எங்கே பயன்படுத்தவேண்டும் என்ற புரிதல் அவரிடம் இல்லை. டேரில் மிட்செல் குல்தீபை எதிர்த்து சிறப்பாக விளையாடுகிறார் என்பதால், க்ளென் பிலிப்ஸும் அதையே செய்வார் என்பதில் அர்த்தமில்லை. குல்தீப் யாதவை க்ளென் பிலிப்ஸால் கணிக்கவே முடியாது. ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கையில்லாமல் கில் இருக்கிறார். ஒரு கேப்டனுக்கும் அணியில் இருக்கும் திறமைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தோனியும், ரோகித்தும் அதை சரியாக செய்தனர், சுப்மன் கில் அதிலிருந்து வேறுபடுகிறார் என பேசியுள்ளார்.

சுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த அஸ்வின்
கம்பீர் தலைமையில் 30 மோசமான RECORDS | படுகுழியில் விழுந்த இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com