ரிஷப் பண்ட் - கேப்டன்? கீப்பர்? பேட்ஸ்மேன்? உலகக் கோப்பை வாய்ப்பு? கேள்விகளும் பதில்களும்!

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வு பெற்றிருக்கும் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்ipl

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கார் விபத்தால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர், இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்ற செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர் என்னவாக விளையாடப்போகிறார், அவரது ரோல் என்னவாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அவற்றுக்கு ஒருசில பதில்களும் கிடைத்திருக்கின்றன.

ரிஷப் பண்ட்
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!

சில மாதங்களுக்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், "ரிஷப் பண்ட் காயத்திலிருந்து நல்லபடியாக மீண்டுகொண்டிருக்கிறார். எப்படியும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்று நினைக்கிறேன். அவர் எப்போதுமே அணிக்குப் பங்களிக்கவேண்டும் என்று நினைப்பவர். விட்டால் 14 போட்டிகளிலுமே பேட்டிங், கீப்பிங் அனைத்தும் செய்யமுடியும் என்று சொல்வார். ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அவர் 10 போட்டியில் விளையாடினால் கூட அது பெரிய விஷயம்தான். அதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என்று கூறினார். அப்போது மீண்டும் இந்த சீசனில் டேவிட் வார்னரே அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரிக்கி பாண்டிங் - ரிஷப் பண்ட்
ரிக்கி பாண்டிங் - ரிஷப் பண்ட்

இந்நிலையில் கடந்த வாரம் பேட்டியளித்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், "ரிஷப் நன்றாக பேட்டிங் செய்கிறார். நன்கு ஓடுகிறார். விக்கெட் கீப்பிங் செய்யத் தொடங்கிவிட்டார். ஐபிஎல் தொடங்கும்போது அவர் முழுமையாக ஃபிட் ஆகிவிடுவார். அவர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்தே அணியை வழிநடத்துவார். முதல் 7 போட்டிகளில் அவர் பேட்ஸ்மேனாகவே ஆடுவார். அதன்பிறகு அவர் உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார். அதனால்தான் அந்த அணி பெரும் தொகை கொடுத்து ஜார்க்கண்ட்டை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ராவை ஏலத்தில் எடுத்திருந்தது.

ரிஷப் பண்ட்
”CSK அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும்” Dhoni-யின் புதிய ரோலை தொடர்ந்து முன்.CSK வீரர் விருப்பம்!

டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்! - ஜெய் ஷா

ஓரிரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா, "ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்துவருகிறார். அவர் நன்றாக கீப்பிங் செய்துவருகிறார். அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பதை சீக்கிரம் அறிவித்துவிடுவோம். அவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினால், அது அணிக்கு மிகப் பெரிய சாதகாமக அமையும். அவர் நம் அணிக்கு மிகப் பெரிய சொத்து. அவரால் கீப்பிங் செய்ய முடிந்தால், அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறலாம். ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.

ஜெய் ஷா
ஜெய் ஷா

இப்போது ஜெய் ஷா சொன்னது போலவே, ரிஷப் பண்ட் ஃபிட்டாக இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. மேலும், அவர் கீப்பிங் செய்வதற்கும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்கள். அதனால் ரிஷப் பண்ட் தொடக்கத்திலிருந்தே கீப்பிங்கும் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட்
29 வருடமாக யாராலும் முறியடிக்க படாத சச்சின் சாதனை.. அவர் முன்னிலையில் வைத்தே உடைத்த முஷீர் கான்!

ரிஷப் பண்ட் நம்பிக்கை!

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

தன் கம்பேக் பற்றிப் பேசியிருக்கும் ரிஷப் பண்ட், "நான் இதை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அதேசமயம் சற்று பதற்றமாகவும் இருக்கிறது. மீண்டும் அறிமுகம் ஆவது போல் உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதுதான் நான் எதிர்பார்த்துக் காத்திருந்தது. இது ஏதோ ஒரு மேஜிக் போல் இருக்கிறது. எனக்காகப் பிராத்தித்த அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும், ஐபிஎல் தொடருக்கும் திரும்ப ஆவலாக காத்திருக்கிறேன். என் அணி உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். இருந்துவருகின்றனர். அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

ரிஷப் பண்ட்
இந்தியாவின் எதிர்காலம்.. கேன் வில்லியம்சனை வீழ்த்தி ICC-ன் சிறந்த வீரர் விருதை வென்ற ஜெய்ஸ்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com