அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியா
அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியாweb

4வது டி20 போட்டி| அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா படைக்க உள்ள 2 சாதனைகள்!

தென்னாப்பிரிக்கா மற்று இந்திய அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
Published on
Summary

இந்திய-தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது டி20 போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா 47 ரன்கள் அடித்தால், விராட் கோலியின் பிரத்யேக சாதனையை முறியடிக்கவுள்ளார். ஹர்திக் பாண்டியா 61 ரன்கள் எடுத்தால் ஆல்ரவுண்டராக புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

செய்தியாளர் - சு.மாதவன்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்கா

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்த இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது. 2 சதங்கள், ஒரு அரைசதம் என அதிரடி காட்டிய விராட் கோலி தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் 5 டி20 போட்டிகள் தொடர் நடந்துவரும் நிலையில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியா
19, 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு வாங்கிய CSK.. யார் அந்த 2 பேர்?

ஜொலிப்பார்களா கில் & சூர்யா?

டி20 தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கும் 4வது டி20 போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 14 மாதங்களில் நடந்திருக்கும் டி20 போட்டிகளில் ஒன்றில்கூட கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 1 மாதமே இருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இந்தசூழலில் இந்திய கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் இருவரும் ஃபார்ம் அவுட்டில் இருந்துவருவது இந்திய அணிக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கில், சூர்யா இருவரும் மோசமாக செயல்படுவது பயிற்சியாளர் கம்பீருக்கு தலைவலியாக இருந்துவரும் சூழலில் இன்றைய போட்டியில் இருவரும் ரன்கள் அடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கும் உலகக்கோப்பைக்கு முன்னதாக இத்தொடர் முக்கியமானது என்பதால், அவர்களும் இப்போட்டியில் கம்பேக் கொடுத்து வெற்றிக்குதிரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியா
சிஎஸ்கே வாங்கிய முதல் வீரர்.. யார் இந்த அகீல் ஹொசைன்..? WI ஆல்ரவுண்டர்!

மைதானம் யாருக்கு சிறந்தது...?

இந்திய- தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது டி20 போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இம்மைதானத்தில் போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் பனிபொழிவு அதிகமாக இருக்கவாய்ப்புள்ளது. இதன்காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்யக்கூடும். முதல் பாதியில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பவுன்ஸ் இருக்க அதிக வாய்ப்புகளும் இருக்கிறது.

லக்னோ கிரிக்கெட் ஸ்டேடியம்
லக்னோ கிரிக்கெட் ஸ்டேடியம்

இம்மைதானத்தில் நடைபெற்ற ஜபிஎல் போட்டிகளில் சுழற்பந்துவீச்சு கைக்கொடுத்துள்ளது என்றாலும், இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பது சற்று குறைவுதான் என்றும் தெரிகிறது. எனவே இப்போட்டியும் சுவாரசியத்திற்கு குறைவில்லாத போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியா
சோஷியல் மீடியா வீரர் UNSOLD.. 20 வயது இளைஞருக்கு ஏமாற்றம்!

இன்றைய போட்டியில் நிகழ்த்தப்படும் சாதனைகள்..

1. இன்றைய போட்டியில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 47 ரன்கள் அடித்தால் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.

2016ஆம் ஆண்டு விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அடித்த 1614 ரன்கள் என்ற சாதனையே முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவரின் சாதனையை இன்றைய போட்டியில் முறியடிக்கவிருக்கிறார் அபிஷேக் சர்மா.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாcricinfo

2.ஜூலை 2024 முதல் 33 இன்னிங்ஸ்களில் இந்தியா தனது எதிரணியை 15 முறை ஆல்அவுட் செய்துள்ளது. இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆல்அவுட் செய்தால் 16வது முறையாக எதிரணியை பவுல்டு அவுட் செய்யும். இது ஒருசர்வதேச அணியின் ஒரு வருடத்தில் செய்யப்பட்ட அதிகப்பட்ச சாதனையாக இருக்கும்.

3. ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் 61 ரன்கள் எடுத்தால் ஆல்ரவுண்டராக 2000 ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய மைக்கல்லை படைப்பார்.

அபிஷேக் சர்மா - ஹர்திக் பாண்டியா
’1000 பவுண்டரி, 55 சராசரி, யாரும் செய்யாத உலகசாதனை..’ டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 14 சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com