சர்வதேச ODI கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வு.. என்ன நடந்தது?
வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அரிதான நிகழ்வு நடந்துள்ளது..
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றிபெற்றது..
அரிதான நிகழ்வு..
வங்கதேசம்-மேற்கிந்திய தீவுகள்அணிகளுக்கு இடையேயானஇரண்டாவது ஒருநாள் போட்டியில்வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத சம்பவம் நடந்துள்ளது. தாஹாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் 50 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்கள் மூலமாகவே வீசி முடித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், ராஸ்டன் சேஸ், அகில்ஹொசைன், கரி பைரி, கூடகேஷ் மோடி,அதனாஸ் என ஐந்து சுழற்பந்துவீச்சாளர்களை மேற்கிந்திய தீவுகள்அணி பயன்படுத்தியது. இந்ததுணிச்சலான உத்தியால், வங்கதேசத்தை 213 ரன்களுக்குள்கட்டுப்படுத்த முடிந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் 213 ரன்கள் அடிக்க, போட்டியின் முடிவு சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 10 ரன்கள் அடிக்க, வங்கதேசத்தால் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 1 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றபெற்று தொடரை 1-1 என சமனில் வைத்துள்ளது. 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவிருக்கிறது..