கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனை
கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனைweb

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோல்வி.. கேப்டனாக கில் மோசமான சாதனை!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
Published on
Summary

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ind vs aus odi series
ind vs aus odi series

இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது..

கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனை
'அஸ்வின் ஏன் இந்த கொலவெறி.. RCB பவுலர்களை நீங்க பேசுனீங்களே..?' - சீக்கா தரப்பில் பதிலடி

கில் மோசமான சாதனை..

பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் 3 முறை மழை குறுக்கிட்டதால் நேரக்குறைப்பு காரணமாக 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 136/9 ரன்கள் சேர்த்தது. DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளத்ஹு.

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 21.1 ஓவரில் 131/3 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய கேப்டனாக டெஸ்ட், ODI, டி20 3 வடிவத்திலும் முதல் போட்டியில் தோல்வியை பதிவுசெய்து கேப்டனாக மோசமான சாதனை படைத்தார் சுப்மன் கில். இந்தப்பட்டியலில் விராட் கோலிக்கு பிறகு 2வது இந்திய கேப்டனாக இணைந்தார்.

கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனை
”இந்தியாவை போல பாகிஸ்தானுடன் கைக்குலுக்க மாட்டோம்..” - ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com