243 ரன்கள் அடித்தும் SRH இடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ்
MIweb

2 கேட்ச் ட்ராப்.. 1 DRS மிஸ்.. 243 ரன்கள் அடித்தும் தோற்றது மும்பை! SRH அபார வெற்றி!

டிராவிஸ் ஹெட் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 243 ரன்கள் அடித்தும் படுதோல்வியை சந்தித்தது..
Published on
Summary

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்து ரியான் ரிக்கல்டனின் 55 பந்தில் 123* ரன்கள் ஆட்டத்தால் 243 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திச் சென்ற SRH, அபிஷேக் சர்மா–டிராவிஸ் ஹெட் தொடக்க வெடிப்பு, பின்னர் கிளாசனின் 30 பந்தில் 65 ரன்கள் உதவியுடன் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டியது. இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 100வது ஐபிஎல் வெற்றியாகும்.

2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களம்கண்டது மும்பை அணி. டாஸ்வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்யாமல் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது.

ரியான் ரிக்கல்டன்
ரியான் ரிக்கல்டன்x

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ரியான் ரிக்கல்டனின் சாதனை சதத்தால் 20 ஓவரில் 243 ரன்கள் குவித்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரிக்கல்டன் 123 ரன்கள் அடித்து அசத்தினார். 

243 ரன்கள் அடித்தும் SRH இடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ்
MI-க்காக அதிவேக சதமடித்த ரிக்கல்டன்.. 243 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்!

3 கேட்ச்கள் ட்ராப்..

244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பந்துவீசியது. ஆனால் தொடக்க ஜோடியாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2 ரன்னில் இருந்தபோது டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை நமன் திர் தவறவிட, பின்னர் 8 ரன்னில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் சென்றபோது மும்பை அணி ரிவ்யூ எடுக்க தவறவிட்டது.

243 ரன்கள் அடித்தும் SRH இடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ்
தோனிக்கு பிறகு ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் ’மக்களின் தலைவன்’.. முன்னாள் CSK வீரர் சொன்ன ஒற்றுமை!

பின்னர் 32 ரன்னிலும் வந்த கேட்ச்சை மீண்டும் நமன் திர் தவறவிட, நடப்பு சீசனில் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த டிராவிஸ் ஹெட் மிருகத்தனமான அடியை வெளிப்படுத்தி 20 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் குவித்தது.

Travis Head
Travis Head

ஒருபக்கம் 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என விரட்டிய அபிஷேக் சர்மா 45 ரன்னில் வெளியேற, 30 பந்தில் 8 சிக்சர்களை பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்து வெளியேறினார். 9 ஓவரில் 130 ரன்கள் அடித்து வலுவான நிலையில் SRH இருந்தாலும், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி கம்பேக் கொடுத்தது.

கிளாசன்
கிளாசன்

ஆனால் மிடில் ஓவரில் SRH அணியின் காப்பானாக விளையாடிவரும் ஹென்ரிச் கிளாசன் மீண்டும் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்தில் 65 ரன்கள் அடிக்க, 18.4 ஓவரிலேயே 8 பந்துகளை மீதம் வைத்து 244 ரன்கள் இலக்கை எட்டியது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

243 ரன்கள் அடித்தும் SRH இடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ்
தடை செய்யப்பட்ட பொருள் பயன்பாடு.. சிறைக்கு செல்லும் அபாயத்தில் IPL கேப்டன்.!

பரிதாப நிலையில் மும்பை அணி..

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு பும்ரா ஃபார்ம் அவுட்டில் இருப்பது பெரிய பாதகமாக அமைந்துள்ளது. நேற்றைய போட்டியிலும் 4 ஓவரில் விக்கெட் இல்லாமல் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார் பும்ரா. அதேபோல அணி கமபினேசனிலும் சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடிக்க முடியாமல் மும்பை அணி இந்த சீசனில் இதுவரை சொதப்பியுள்ளது.

MI, 2026
MI, 2026web

8 போட்டிகளில் 6-ல் தோற்றுள்ள மும்பை அணி, மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். நல்ல வீரர்கள் இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி ஒரு மோசமான சீசனை கொண்டிருப்பதற்கு அவர்கள் தங்களை தானே நொந்துகொள்ள வேண்டும்.

243 ரன்கள் அடித்தும் SRH இடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ்
மொத்தமாக கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்.. தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com