ரியான் ரிக்கல்டன்
ரியான் ரிக்கல்டன்x

MI-க்காக அதிவேக சதமடித்த ரிக்கல்டன்.. 243 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
Published on
Summary

வான்கடே மைதானத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், ரிக்கல்டன் – வில் ஜாக்ஸ் அதிரடி தொடக்கத்தால் 20 ஓவரில் 243 ரன்கள் குவித்தது. 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்த ஜாக்ஸுக்கு பின், 55 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 123 ரன்கள் குவித்த ரிக்கல்டன் ஆட்டமிழக்காமல் அசத்தினார்.

2026 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க வேண்டிய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களம்கண்டது மும்பை அணி. டாஸ்வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்யாமல் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் அதிரடியாக தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த வில் ஜாக்ஸ் 46 ரன்கள் அடித்து வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரிக்கல்டன் 123 ரன்கள் அடித்து அசத்தினார். ரிக்கல்டனின் அதிரடியால் 20 ஓவரில் 243 ரன்கள் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

ரியான் ரிக்கல்டன்
மொத்தமாக கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்.. தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா!

2 சாதனை படைத்த ரிக்கல்டன்..

அதிவெக சதம்:

44 பந்தில் சதமடித்த ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸுக்காக அதிவேகமாக சதமடித்த வீரராக சாதனை படைத்தார். 45 பந்தில் சதமடித்திருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டது.

அதிக ரன்கள்:

123 ரன்கள் அடித்த ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸுக்காக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த வீரராக மாறினார். முதலிடத்தில் 114 ரன்களில் இருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது.

ரியான் ரிக்கல்டன்
“ஃபிளெமிங்கை குத்தம் சொன்னீங்க.. இப்போ உங்க நிலைமை என்ன” - பதானியை சாடிய முன்னாள் கேப்டன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com