INDvsNZ 2வது ODI| மழையால் ஆட்டம் தாமதம்.. 3 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2வது போட்டியில் மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. 47 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில், நியூசிலாந்து 33 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 185 ரன்னுக்கு நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா, விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கால் வெற்றிபெற்றது. 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடந்துவருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 33 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. அகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

