\
axar patel to csk
axar patel to cskpti / instagram

CSK-க்கு வரும் அக்சர் பட்டேல்.. அணியை வலுவாக்க துடிக்கும் ஜாகீர்! ஸ்மார்ட் மூவ் நகர்த்தும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அக்சர் பட்டேல் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: 
Summary

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் ஜாகீர் கான், அணியின் பலவீனங்களை சரிசெய்ய பல டிரேட்களை மேற்கொண்டு வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து அக்சர் பட்டேலை அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அணி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பை வென்ற கையோடு தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 சீசன்களாக சொதப்பி வருகிறது. அணிக்குள் பலபிரச்னைகள் இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழு கலைக்கப்பட்டு ஜாகீர் கான் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக முடிந்தளவு நல்ல டிரேட்களை செய்து அணியை குறைகளை குறைக்க ஜாகீர் கான் செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் ஹர்திக் பாண்டியாவை கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அது கைக்கூடவில்லை என தெரிகிறது. இதனால் சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் இருவரையும் அணிக்குள் கொண்டுவந்துள்ளார் ஜாகீர் கான்.

instagram

தொடர்ந்து டிரேட் நடக்கும் என சென்னை நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலை எடுத்துவர கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்சர் பட்டேல், அஷுதோஷ் சர்மா இருவரை வாங்கிவிட்டு, டெவால்ட் பிரேவிஸ் உடன் ஒருவரை விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அவருடைய யூடியூப் சேனலில் இடதுகை ஆல்ரவுண்டர் சென்னை அணிக்கு வர வாய்பிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அக்சர் பட்டேலை அணிக்குள் கொண்டுவர கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

axar patel to csk
’தொடர்ந்து நிராகரிப்பு..’ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி!