இரட்டை சதமடித்த அமன் ராவ்
இரட்டை சதமடித்த அமன் ராவ்web

IPL ஆக்சனில் 30 லட்சத்திற்கு ஏலம்.. இரட்டை சதமடித்த 21 வயது வீரர்.. யார் இந்த அமன் ராவ்..?

2026 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட 21 வயது வீரர் விஜய ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
Published on
Summary

விஜய் ஹசாரே டிராபியில் ஹைத்ராபாத் அணிக்காக விளையாடிய 21 வயது இளம் வீரர் அமன் ராவ், 154 பந்தில் 200* ரன்கள் குவித்து இரட்டை சதமடித்தார். அவரது அசத்தலான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. 2026 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 30 லட்சத்திற்கு ஏலமெடுக்கப்பட்டார்.

2025-2026 விஜய் ஹசாரே டிராபியானது டிசம்பர் 24ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 18ஆம் தேதிவரை நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

விஜய் ஹசாரே
விஜய் ஹசாரே

ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அங்கீகரிக்கப்படுவதால், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் 21 வயது இளம் வீரரான அமன் ராவ் 154 பந்தில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்..

இரட்டை சதமடித்த அமன் ராவ்
”அடிமைக்காலம் முடிந்துவிட்டது..” இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் வேண்டாம்.. வங்கதேசம் விலக முடிவு!

இரட்டை சதமடித்த 21 வயது வீரர்..

இன்று நடைபெற்ற ஹைத்ராபாத் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைத்ராபாத் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய 21 வயது இளம் வீரரான அமன் ராவ், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரிகள் 12 சிக்சர்கள் என பறக்கவிட்டு 154 பந்தில் 200* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 49.4 ஓவர் இருக்கும்போது அமன் ராவின் இரட்டை சதத்திற்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. 50வது ஓவரின் 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்த அமன், கடைசி பந்தில் சிக்சரை பறக்கவிட்டு இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இவருடைய ஆட்டம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து விளையாடிய பெங்கால் அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டநாயகனாக இரட்டை சதமடித்த அமன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரட்டை சதமடித்த அமன் ராவ்
'முஸ்தஃபிசூர் ஒருபோதும் அதை செய்யமாட்டார்..' அதுதான் அவர் மனசு! சகவீரர்கள் பதில்!

யார் இந்த அமன் ராவ்..?

அமன் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற இடத்தில் பிறந்தவர், ஆனால் அவர் வளர்ந்ததெல்லாம் ஹைத்ராபாத்தில் தான். தொடக்க வீரராக களமிறங்கி தன்னுடைய அச்சமற்ற ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். டி20 கிரிக்கெட்டில் 160+ ஸ்ட்ரைக் ரேட்டுடன், வெடிக்கும் பேட்டிங் திறனை கொண்ட அமன் ராவை 2026 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலமெடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இரட்டை சதமடித்த அமன் ராவ்
'வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல.. முஸ்தபிசூர் இந்து வீரராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?'- சசி தரூர்
அமன் ராவ்
அமன் ராவ்

யு-23 ஸ்டேட் டிராபியில், ஆறு போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட 63 சராசரியுடன் 381 ரன்கள் குவித்த பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் டீமை கவர்ந்தார் அமன் ராவ். அதுமட்டுமில்லாமல் சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் மும்பைக்கு எதிராக அதிரடியான அரைசதத்தை பதிவுசெய்திருந்தார் அமன் ராவ்.

இந்தசூழலில் விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதமடித்திருக்கும் அமன் ராவ், விஜய் ஹசாரே வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் ஹைத்ராபாத் வீரர் என்ற சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இரட்டை சதமடித்த அமன் ராவ்
'ஆப்கானிஸ்தான் வீரர்களையும் IPL-ல் தடை செய்வார்கள்..' கொளுத்தி போட்ட பாகிஸ்தான் வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com