நவம்பர் 27-ல் WPL ஏலம்.. களத்தில் பெரிய வீராங்கனைகள்! ரீடெய்ன் செய்யப்பட்டவர்கள் யார்..?
வீராங்கனையை2026 மகளிர் பிரீமியர் லீக் ஏலம் நவம்பர் 27-ம் தேதி புது டெல்லியில் நடைபெறுகிறது. 5 அணிகள் தங்களின் தக்கவைப்பு விபரங்களை அறிவித்துள்ளன. உபி வாரியர்ஸ் அணி ஒரே ஒரு அன்கேப்டு வீராங்கனையை மட்டுமே தக்கவைத்துள்ளது. முக்கிய வீராங்கனைகளான மெக் லானிங், லாரா வோல்வர்ட், தீப்தி சர்மா உள்ளிட்டோர் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
2025 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. 3முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணியால் ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை.
இந்தசூழலில் தான் 2026 WPL தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 27-ம் தேதி புது டெல்லியில் நடக்கவிருக்கிறது.. ஏலத்திற்கு முன் தங்களுடைய தக்கவைப்பு மற்றும் வெளியேற்றும் வீராங்கனைகளின் விபரங்களை 5 அணிகளும் வெளியிட்டுள்ளன..
இந்நிலையில் முழுமையாக தங்களுடைய அணியை கலைத்திருக்கும் உபி வாரியர்ஸ் ஒரேயொரு அன்கேப்டு வீராங்கனையை மட்டுமே தக்கவைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது..
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையானது 15 கோடி ரூபாய்.. வீராங்கனைகள் தங்களுடைய அதிகபட்ச விலையாக 50 லட்சம், 40 லட்சம் மற்றும் 30 லட்ச ரூபாயை நிர்ணயம் செய்துகொள்ளலாம்..
ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் 5 வீராங்கனைகளை தக்கவைத்துக்கொள்ளலாம், அதில் 3 கேப்டு இந்திய வீராங்கனைகள், 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மற்றும் 1 அன்கேப்டு வீராங்கனையும் அனுமதிக்கப்படுகிறார்கள்.. 5 வீராங்கனைகளை அணி தக்கவைக்கும்போது அதில் ஒரு அன்கேப்டு வீரர் நிச்சயம் இடம்பெறவேண்டும்..
இந்நிலையில் தான் தங்களுடைய தக்கவைப்பு வீராங்கனைகளை 5 WPL அணிகளும் அறிவித்துள்ளன. அதன்படி,
டெல்லி கேபிடல்ஸ் (DC) - ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, அன்னாபெல் சதர்லேண்ட்*, மரிசன்னே காப்*, நிகி பிரசாத்
குஜராத் ஜெயண்ட்ஸ் (GG) - ஆஷ்லீ கார்ட்னர்*, பெத் மூனி*
மும்பை இந்தியன்ஸ் (MI) - நடாலி ஸ்கிவர்*, ஹர்மன்பிரீத் கவுர், ஹேலி மேத்யூஸ்*, அமன்ஜோத் கவுர், G கமலினி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) - ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி*, ஷ்ரேயங்கா பாட்டீல்
உபி வாரியர்ஸ் (UPW) - ஸ்வேதா செஹ்ராவத் (அன்கேப்டு பிளேயர்)
ஏலத்தில் உள்ள மிகப்பெரிய பெயர்கள்..
2026 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பிக்பாஸ் லீக்கில் பட்டையை கிளப்பி வரும் மெக் லானிங், உலகக்கோப்பையில் தொடர் நாயகி விருதுவென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வர்ட், இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, அலீசா ஹீலி, சோஃபி டெவைன், ரேணுகா தாக்கூர் போன்ற வீராங்கனைகள் ஏலத்திற்கு வருகின்றனர்..
ஏலத்தில் இடம்பெறும் முக்கிய வீரர்கள்:
சோஃபி டெவின் (நியூசிலாந்து) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
சோஃபி எக்செல்ஸ்டோன் (இங்கிலாந்து) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
அமெலியா கெர் (ஆஸ்திரேலியா) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
தீப்தி சர்மா (இந்தியா) - அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்
ரேணுகா தாக்கூர் (இந்தியா) - அடிப்படை விலை - ரூ. 40 லட்சம்
லாரா வால்வார்ட் (தென்னாப்பிரிக்கா) - அடிப்படை விலை - ரூ. 30 லட்சம்
2026 WPL ஏலம் எப்போது? எங்கு?
2026 WPL ஏலமானது நவம்பர் 27ஆம் தேதி புது டெல்லியில், மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.. 73 இடங்களுக்கு 273 வீராங்கனைகளும் பதிவுசெய்துள்ளனர்.. 50 இடங்களுக்கு 194 இந்திய வீராங்கனைகளும், 23 இடங்களுக்கு 66 வெளிநாட்டு வீராங்கனைகளும் பதிவுசெய்துள்ளனர்..

