rasipalan
rasipalanfb

அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்... இன்றைய ராசிபலன்கள்.. (ஜூலை19, 2025)

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ. பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்
Published on

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே ! குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள்.எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!மனதளவில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள்.பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.பரிசு கிடைக்கும் நாள்.

rasipalan
புதன், வெள்ளி, பூமியை சூரியன் விழுங்கும்! எப்போது? - ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு விஷயங்களில் ஆலோசனை வேண்டும்.மனை விற்பனையில் தாமதம் ஏற்படும்.விருப்பமான பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள்.சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே!புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும்.அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.தடைப்பட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவல் பணிகளில் கால தாமதம் ஏற்படும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உணவு விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

rasipalan
rasipalan

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!வரவுகளில் இருந்த தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான செயல்களால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும்.பயணங்களால் அறிமுகங்கள் ஏற்படும்.தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் ஆதரவுகள் கிடைக்கும். சினம் மறையும் நாள்.

rasipalan
rasipalan

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடன் பிறத்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். விட்டுக் கொடுத்து செயல்படுவதன் மூலம் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமித்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகள் இருந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். பெருமை மேம்படும் நாள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே!மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் சிலரின் அறிமுகங்கள் அமையும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். யோகம் நிறைந்த நாள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

rasipalan
புதன் வக்கிரப்பெயர்ச்சி.. இந்த ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கும்..!

மீனம்

மீன ராசி அன்பர்களே!சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

rasipalan
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரை!

நல்ல நேரம் (19.07.2025)

மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 3 ந் தேதி சனிக் கிழமை

மதியம் 1:46 மணி வரை நவமி திதி பிறகு தசமி திதி.

இன்று அதிகாலை 1:52 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம்

ராகு காலம் : காலை 9 மணி முதல் 10:30 மணி வரை.

எமகண்டம் மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை.

குளிகை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை

நல்ல நேரம்: மதியம் 12:15 மணி முதல் 1:15மணி வரை மாலை 6:30 மணி முதல் 7:30 வரை

சூலம் கிழக்கு

நாள் முழுவதும் சித்த யோகம்

சந்திராஷ்டமம் : ஹஸ்தம் நட்சத்திரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com