இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் உத்தரப்பிரதேச கல்வீச்சு, ஐபிஎல் மெகா ஏலம் என பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அதானி விவகாரம், வக்பு சட்டத்திருத்தம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பக்கூடும் என எதிர்பார்ப்பு.

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள்.

  • தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும், முதல்வர் அறிவுரையின்படி செயல்படுவோம் என்றும் திமுக எம்.பி. கனிமொழி பேட்டி.

மக்களவையில் எம்.பி`கனிமொழி கருணாநிதி
மக்களவையில் எம்.பி`கனிமொழி கருணாநிதிபுதிய தலைமுறை
  • கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுகவால் வெற்றி பெற முடியாது என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து.

  • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசில் பங்கு கேட்பதில் தவறில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.

  • தமிழ் மொழியை நம் கண்போல காக்க வேண்டும் என நடிகர் சத்யராஜூக்கு கலைஞர் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் கைகளால் ‘கலைஞர்’ விருது பெற்றார் நடிகர் சத்யாரஜ்!
  • அதிமுகவை அழிக்க முயற்சிப்போரின் எண்ணம் நிறைவேறாது என ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

எடப்பாடி பழனிசாமி - எம்.ஜி.ஆர், ஜானகி
எடப்பாடி பழனிசாமி - எம்.ஜி.ஆர், ஜானகிபுதிய தலைமுறை
  • சட்டமன்ற தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு. டெல்லியில் இன்று மகாயுதி கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசவும் திட்டம்.

 ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டேமுகநூல்
  • உத்தரப் பிரதேச மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு நடந்தது. வன்முறையாக மாறிய நிலையில் 20 பேர் கைது.

  • இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி லெபனான் தாக்குதல். வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சேதம்.

  • 2024 ஆம் ஆண்டின் செஸ் சாம்பியன் யார்? சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில்,தமிழகத்தின் குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு.

  • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம். இமாலய வெற்றி இலக்கை துரத்தும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறல்.

  • ஐபிஎல் 2025-க்கான ஏலத்தின் முதல்நாள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு ரிஷப் பந்த் அதிக விலைக்கு ஏலம் போனார். இந்தியா, வெளிநாடு என மொத்தம் 72 வீரர்கள் ஏலம் போனர். இன்று மதியம் முதல், இரண்டாம் நாள் ஏலம் நடக்க உள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
🔴LIVE | IPL 2025 Auction | ஐபிஎல் ஏலம் முதல் நாள் | எந்த அணியில் எந்த வீரர்...? முழுமையான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com