புதன் வக்கிரப்பெயர்ச்சி.. இந்த ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கும்..!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது ராசியை மாற்றிக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது பின்னோக்கி வக்ர நிலையிலும் பயணிக்க தொடங்கும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
இந்நிலையில் கடக ராசியில் புதன் கிரகம் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி (2025 )அன்று காலை 09:45 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார்.. கடக ராசியில் பின்னோக்கிச் செல்லும் புதன் கிரகம் கிரகங்களில் இளவரசனாக கருதப்படுகிறார்.. இவர் பகுத்தறிவு, அறிவு மற்றும் வணிகத்தின் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
மேலும் புதன் ஆகஸ்ட் 11ஆம் தேதி 2025 வரை கடகத்தில் வக்கிர கதியில் இருப்பார். சனி, குரு மற்றும் ராகு-கேது போன்ற கிரகங்களின் பெயர்ச்சியைப் போல புதனின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், புதனின் பெயர்ச்சிக்கும் அதன் சொந்த ராசியினருக்கு முக்கியமான மாற்றத்தை கொடுக்கும்.. அது எந்தெந்த ராசியினர் என்பது குறித்தும், வக்ர பெயர்ச்சி என்றால் என்ன? என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பெயர்ச்சி என்றால் என்ன?
பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைக் குறிக்கும். இது ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுகின்றன. புதன் கிரகம் தன் ராசியை மாற்றும்போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது
வக்ர பெயர்ச்சி என்றால் என்ன?
பொதுவாக கிரகங்கள் நேராகதான் நகரும்.. ஆனால் கிரகங்கள் தங்கள் வழக்கமான சுழற்சியிலிருந்து சற்றி மாறி பின்னோக்கிச் செல்வது போல் தோன்றுவது வக்ர பெயர்ச்சி எனப்படும்.
புதன் வக்ரப்பெயர்ச்சி என்றால் என்ன?
புதன் வக்ர பெயர்ச்சி என்பது புதன் கிரகம் தனது வழக்கமான சுழற்சியிலிருந்து பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்றம் அளிக்கும் ஒரு நிகழ்வாகும்.ஜோதிடத்தில் புதன் கிரகத்தின் ஆற்றல் சற்று வலுவிழந்து, குழப்பங்களையும், தாமதங்களையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
புதன் கிரகம் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகம் மற்றும் அதன் பின்னோக்கி மற்றும் நேரடி இயக்கம் அனைத்து ராசியினரையும் பாதிக்கிறது. புதனின் வக்ரநிலை, யாருடைய ஜாதகத்தில் புதன் முக்கியமான வீடுகளின் அதிபதியாக இருக்கிறாரோ அவர்களைப் பாதிக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3வது வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். இதனால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.. ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிலும் வணிகர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும். அத்துடன் இதுவரை கிடைக்காத கைக்கு வராத பணம் உங்களை தேடி வரும்..
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். இதனால் இந்த காலம் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். திடீர்னு பண வரவு அதிகமாக கிடைக்கும்.. நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும்..
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணியிடத்தில் பணமும் பதவியும் உயரக்கூடும். நிதி ஆதாயத்திற்கான பல வழிகள் திறக்கப்படலாம். திருமண வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரித்து அன்பு வளரக்கூடும்.
இந்த தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான தெரிந்துக்கொள்ள உங்களின் ஜாதகத்தை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் வழங்கி பார்த்துக் கொள்ளுங்கள்..