தென் கைலாயம்
தென் கைலாயம்X page

தென் கைலாயத்தில் குவியும் சிவ பக்தர்கள்.. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஒவ்வொரு பெளர்ணமியும் காலநிலைக்கு ஏற்ப வெள்ளிங்கிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
Published on

தென் கைலாயம் என சிவ பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை கோயிலில் சுயம்புவாக அருள்பாலிக்கும் லிங்கத்தை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சிவ பக்தர்கள் வருவது வழக்கம். இந்த திருக்கோயிலை பக்தர்கள் ஏழு மலை ஏறி சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமியும் காலநிலைக்கு ஏற்ப வெள்ளிங்கிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலையைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.. 

தென் கைலாயம் - வெள்ளியங்கிரி மலை
தென் கைலாயம் - வெள்ளியங்கிரி மலைx page

இந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலிருந்து சுமார் 5.4 கி.மீ தூரமும் 6000 அடி உயரமும் கொண்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் நாள் முதல் மே மாதம் வரை மலை ஏற்றத்திற்கு வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். மொத்தம் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சுயம்புவாக சிவபெருமான் ஆட்க்கொண்டுள்ளார். 

தென் கைலாயம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா..? தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்!

சிவனுக்கு உகந்த மலை

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமான பாதையைக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் பலருக்குக் கடினமான ஒன்றாகவே இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏற்றம், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி சிவராத்திரி போன்ற சிவனுக்கு உகந்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களையும் மலை ஏற்ற பிரியர்களையும் கவர்ந்துள்ளது இந்த கோவை வெள்ளியங்கிரி மலை. 

வெள்ளியங்கிரி மலை - சிவன்
வெள்ளியங்கிரி மலை - சிவன்வெள்ளியங்கிரி மலை - சிவன்

மேற்குத் தொடர்ச்சி மலையான வெள்ளியங்கிரி மலையில் பல்வேறு விதமான மூலிகை மரங்களும் அரிய வகை தாவரங்களும் உள்ளன. எழில் கொஞ்சும் இந்த வெள்ளியங்கிரி மலையில் பல்வேறு வகையான பறவையினங்களும் பூச்சி இனங்களும் உள்ளன. 

சிவ தரிசனம்

இவை தவிர யானை, சிறுத்தை செந்நாய் போன்ற வனவிலங்குகளும் அதிக அளவில் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம், சூழலியல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 3 மாதங்கள் வரை பக்தர்கள் மலையேற்றம் செய்து சிவனை தரிசிப்பார்கள். 

மொத்தம் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலை ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமான சூழலைக் கொண்டது. முற்றிலும் படிகளைக் கொண்டு தொடங்கும் முதல் மலையும், ஒரு படிகூட இல்லாமல் முற்றிலும் செங்குத்தான 7 ஆவது மலை என வெள்ளியங்கிரி மலை பல சவால்களைக் கொண்டது. 

தென் கைலாயம் - வெள்ளியங்கிரி மலை
தென் கைலாயம்X page

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமான மலை அமைப்பையும் ஆச்சரியத்தையும் கொடுத்தாலும் 7 ஆவது மலையிலிருந்து நம் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் காண முடியும். 

தென் கைலாயம்
மாதாந்திர பூஜை | சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சுயம்புலிங்கமாக 7ஆவது மலையில் சிவன்

சுயம்புலிங்கமாக அவதரித்துள்ள சிவனை ஏழாவது மலையில் காண்பதோடு மட்டுமல்லாமல் ஏழாவது மலையில் இருந்து சூரிய உதயத்தை காண ஒரு தனி பட்டாளமே வெள்ளியங்கிரிக்கு படையெடுக்கும். தவழும் மேக கூட்டங்களுக்கு நடுவே இளஞ்சிவப்பு நிறத்தில் அக்னி பிளம்பாய் உதயமாகும் சூரிய பகவானை ஆச்சரியத்துடனும் உற்சாகத்துடனும் பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள். 

ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையின் ஆச்சரியத்தையும் சவால்கள் நிறைந்த புதிய அனுபவங்களையும் பெற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. சிவபெருமானை தரிசனம் செய்ய விரதம் இருந்து ஏழுமலை ஏறி தரிசிப்பது மிகவும் புனிதமான விஷயமாக சிவ பக்தர்கள் கருதுகின்றனர். 

வெள்ளியங்கிரி மலை ஓர் ஆச்சரியம்

இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.. இதில் நேற்று தேர்தல் என்பதால் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதல் (ஏப்.24) வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளியங்கிரி மலை - சிவன்
வெள்ளியங்கிரி மலை - சிவன்வெள்ளியங்கிரி மலை - சிவன்

அத்துடன் கடந்த விடுமுறையில் ஐந்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருந்தது.. ஆனாலும் இந்த முறையும் (2026) இப்போதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்..

தென் கைலாயம்
கலியுக முடிவில் கல்கி அவதாரம் உண்மையா? இந்து புராணம் என்ன சொல்கிறது?

வழிகாட்டு நெறிமுறைகள்

1. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குழந்தைகள், உயர் இரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், இரத்தசோகை உள்ளவர்கள் மற்றும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்ற பயணத்தை மிகவும் அதிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

2. மலையேற்றத்திற்குச் செல்லும் பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகவும் அத்தியாவசியமான பொருள்களான குடிதண்ணீ,ர் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

3. மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

வெள்ளயங்கிரி மலை
வெள்ளயங்கிரி மலைx Page

4. மலையேற்றத்திற்கு முன்பு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவின் மூலம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

5. பயணத்தின்போது உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு குடிநீர் பருகுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

6. மலையேற்றத்தின்போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் மற்றும் இதர அசௌகரியங்கள் ஏற்பட்டால் பயணத்தைத் தொடராமல் உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com