சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடைதிறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடைதிறப்புfile

மாதாந்திர பூஜை | சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

மலையாள 'மிதுனம்' மாதம் மற்றும் தமிழின் 'ஆனி' மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூன் 14ம் தேதி), பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, 62 நாட்கள் நீண்டிருக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைக்காகவும் திறக்கப்படுகிறது. அந்த வகையில், மலையாள 'மிதுனம்' மாதம் மற்றும் தமிழின் 'ஆனி' மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூன் 14ம் தேதி) பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

Sabarimalai
Sabarimalaifile

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். இதையடுத்து ஜூன் 15ம் தேதி முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணி வரை, நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், களபாபிஷேகம், படி பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடைதிறப்பு
300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் இருப்பது கண்டுபிடிப்பு!

மாதாந்திர பூஜைகளுக்குப் பின் ஜூன் 19ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பக்தர்கள், தரிசனத்திற்கு sabarimalaonline.org.in  முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com