மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில் அரசியல் சார்ந்தவர்கள் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் திரைத்துறையில் இருந்து வரும் எதிர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன்.
’இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் சமூக சூழல் இன்னும் சாதியம் சார்ந்த பிரச்சனைகளால் நிறைந்திருக்கும் போது, இப்படியான படங்கள் மிக அவசியமானவை’ - துருவ்.
கடைக்காரரோடு பேரம் பேசும் போது வெளியே இருந்து சிலர் எனக்கு கை காண்பித்தார்கள். அவர்கள் உங்கள் நண்பர்களா என கடைக்காரர் கேட்டார், இல்லை என்றதும் நீங்கள் நடிகரா என கேட்டார், ஆம் என்றேன்.
பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னை தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றி.