"என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் படம்" - பைசன் பயணம் குறித்து நெகிழும் அனுபமா | Anupama | Bison
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இப்படத்தில் ராணி என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். இப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்திருக்கும் வேளையில், இப்படத்தில் தன் பயணம் குறித்து இன்ஸ்ட்டாவில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு உள்ளார் அனுபமா.
"பைசனின் 10 நாட்கள்... என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு மாற்றமாக மாறிவிடுகின்றன. பைசன் எனக்கு அப்படியானது தான். என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்.
மாரி செல்வராஜ் சார், இந்தக் கதைக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு, நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரம், வாழ்த்துக்கள். இது அதிர்ஷ்டம் அல்ல... உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் தகுதியானவர்.
ரஜிஷா விஜயன் ஒரு நடிகை என்பதையும் தாண்டி ஒரு சகோதரி போல பழகியதற்கு நன்றி. நிவாஸ் கே. பிரசன்னா என்ன ஒரு அருமையான துவக்கம். இந்த மேஜிக்கை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், உங்களை எங்கோ கூட்டி செல்லும். அப்ளாஸ் சோஷியல், நீலம் ஸ்டுடியோஸ் இந்தப் பெரிய விஷயத்தில் ஒரு சின்ன பாகமாக என்னை இணைத்ததற்கு நன்றி. பைசன் குடும்பத்தினரே, நாம் கைகோர்த்தோம், நம்பினோம், உருவாக்கினோம், வெடிப்பை உருவாக்கினோம். என்னவொரு அற்புதமான பயணம் நன்றி.
இறுதியாக பார்வையாளர்கள்... உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரவணைத்து, அதை இவ்வளவு கொண்டாடி, திரையில் மட்டும் இல்லாமல் உங்கள் இதயங்களிலும் இடமளித்த ரசிகர்களுக்கு நன்றி. பைசன் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அனுபமா.

