தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பணி நிரந்தரம் செய்துதர வேண்டி 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஏற்று இரவு வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.