டிசம்பர் 25 காலை தலைப்புச் செய்திகள்
டிசம்பர் 25 காலை தலைப்புச் செய்திகள்pt

HEADLINES | நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் To 1000 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் முதல் முக ஸ்டாலினை விமர்சித்த விஜய் வரை விவரிக்கிறது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகனில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பெருந்திரளானோர் பங்கேற்பு... இயேசு பிறப்பு குறித்த அறிவிப்பை வாசித்து, குழந்தை இயேசுவுக்கு முத்தமிட்ட போப் லியோ...

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்... நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மத வேறுபாட்டை கடந்து, கிறிஸ்துமஸை கொண்டாடிய மக்கள்... சிறப்பு பிரார்த்தனையில் பலரும் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு...

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் அலங்கார வாகன அணிவகுப்பு கோலாகலம்... கன்னியாகுமரியில் கடற்கரை கிராமத்தில் டிஜே பாடலுடன் கிறிஸ்து பிறப்பை கொண்டாடிய மக்கள்....

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸை ஒட்டி ஒரு லட்சத்துக்கும் அதிகமான விளக்குகளை கொண்டு பிரமாண்ட பந்தல் அமைப்பு.... 55 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் டவரை கண்டுரசித்த மக்கள்...

பாம்பனில் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய இளைஞர்கள்... விசைப்படகில் மீனவர்களுடன் கேக் வெட்டி, ஆடி, பாடி உற்சாகம்...

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் Pt web

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்... மின்னொளியில் ஜொலித்த தேவாலயங்கள், வீதிகளை அலங்கரித்த வண்ணவிளக்கு தோரணங்கள்...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள்... ஜெர்மனியில் கால்பந்து மைதானத்தில் 28 ஆயிரம் ரசிகர்கள் கூடி பாடல்களை பாடி உற்சாகம்...

இயேசு காட்டிய பாதையில் கருணை, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க உறுதியளிப்போம்... கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து...

கீழடி அகழாய்வு தொடர்பான 114 பக்க அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய தொல்லியல் துறை... உரிய பதிலை விரைவில் அளிக்கப் போவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் விளக்கம்...

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்... மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 289 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழ்நாடு அரசு...

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்... மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு...

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம்web

தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று போராட்டம் வாபஸ்... ஒப்பந்த செவிலியர்கள் அறிவிப்பு...

தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்... தோனியின் தலைமைப் பண்பு பிடிக்கும்என பேச்சு...

தீயசக்தி திமுகவின் ஆட்சிக்கு, வரும் தேர்தலில் முடிவுரை எழுதப்படும்.. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி..

திமுகதான் பாஜகவின் முதல் அடிமை... முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக தலைவர் விஜய் பதில்...

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஆலோசனைக் கூட்டம்.... விஜயின் தவெகவுடன் கூட்டணிவைக்கலாம் என பெரும்பாலானமாவட்ட செயலர்கள் விருப்பம்தெரிவித்ததாக தகவல்...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நல்ல முடிவெடுப்பார்... விஜயுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விக்கு தவெகவின் செங்கோட்டையன் பதில்...

OPS | OPanneerselvam
OPS | OPanneerselvampt desk

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நல்ல முடிவெடுப்பார்... விஜயுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விக்கு தவெகவின் செங்கோட்டையன் பதில்...

மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது தமிழக அரசின் அதிநவீன வால்வோ பேருந்துகள்... சென்னையில் இருந்து நெல்லைக்கு ஆயிரத்து 80 ரூபாய் கட்டணம் நிர்ணயம்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோர சாலை விபத்து... மூன்று பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம்...

உதகையில் மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் வெப்பநிலை... தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்பு...

நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகாலையில் உறைபனி நீடிக்கும்... தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் கணிப்பு...

தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் எனவும் கணிப்பு...

நீலகிரி
நீலகிரி

வட இந்தியாவில் அதீத பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... அடர் பனியால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் பேருந்து, ரயில், விமான சேவைகள்..

டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்... காற்று சுத்திகரிப்பானுக்கான ஜிஎஸ்டியை குறைக்க டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்...

ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கப் பணிகளுக்கான புதிய குத்தகைகளை வழங்கத் தடை விதித்தது மத்திய அரசு.... ஆரவல்லி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் விளக்கம்...

செயல்பாட்டுக்கு வந்தது நவி மும்பை சர்வதேச விமான நிலையம்... சுமார் ஆயிரத்து 500 ட்ரோன்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட கண்கவர் காட்சி...

வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை...

ரோகித் - கோலி
ரோகித் - கோலிweb

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி, ரோகித் சர்மா... பந்துவீச்சாளர்களை திணறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்ட இளம்வீரர்கள் சகிபுல் கனி, இஷான் கிஷன், சூர்யவன்ஷி...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com