தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர் சேகர் பாபு
தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர் சேகர் பாபுPt web

”தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள்” - அமைச்சர் சேகர் பாபு.!

தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார்.
Published on

தனியார் மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாள் தொடர் போராட்டத்தின் பிறகு, ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு தமிழக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக இலவச உணவு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கக் கூடாது; மாநகராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றவில்லை.

தூய்மைப் பணியாளர்கல்
தூய்மைப் பணியாளர்கல்Pt web

இந்த நிலையில், தூய்மைப்பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்கள். அதன்படி, சென்னை அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தான், நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் எனவும், தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர் சேகர் பாபு
4 பெண் தூய்மைப் பணியாளர்கள் 14-வது நாள் உண்ணாவிரதப் போராட்டம்., 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “5 மற்றும் 6 மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ள கூடாது என உத்திரவிட்டிருந்தார். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக கண்ணியத்துடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் செயலாளர் முத்தரசன் உழைப்பர் உரிமையை இயக்க தலைவர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுPt web

மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, மேயர், துணை மேயர் ஆகியோருக்கும் நன்றி. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மாதம் இறுதிக்குள் மீண்டும் சென்னை மாநகராட்சியின் கீழ் பணிய அமர்த்தப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்; வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்.

ஊதியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். ஊழியர்களின் நலனுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினரும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நாங்களும் இரு பக்கமும் தட்டிக் கொடுத்து எந்த உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வோம்" என்று தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர் சேகர் பாபு
தூய்மை பணியாளர்கள் போராட்டம்| நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com