முடி வளர விஞ்ஞானிகள் சோதனை
முடி வளர விஞ்ஞானிகள் சோதனை pt web

வழுக்கையை 20 நாளில் மாற்றும் பரிசோதனை... புதிய சீரம் : விஞ்ஞானிகள் நம்பிக்கை !

வழுக்கையை 20 நாட்களில் மாற்றியமைக்கும் திறன் கொண்ட புதிய பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், 20 நாட்களுக்குள் அவற்றின் மயிர்க்கால்களில் புதிய முடிகள் வளரத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.
Published on
Summary

வழுக்கையை 20 நாட்களில் மாற்றியமைக்கும் திறன் கொண்ட புதிய பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முடி உதிர்வுக்கு காரணமான மரபணுக்களை குறிவைத்து தாக்கும் வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண முடி வளர்ச்சியை விட இது வேகமாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் பலருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது தலையில் வழுக்கை. தலையில் முடி உதிர்ந்து வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் விதமாக, ஒரு புதிய பரிசோதனை சீரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சீரம், வழுக்கையை வெறும் 20 நாட்களுக்குள் தலைகீழாக மாற்றியமைக்கும் திறன் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வழுக்கை
வழுக்கை

ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருளைப் பயன்படுத்தி, முடியை மீண்டும் வளர வைக்கும் திறன் கொண்ட சீரத்தை உருவாக்கியுள்ளனர். வழுக்கை ஏற்படுவதற்கு காரணமான மரபணுக்களை இந்த சீரம் குறிவைத்துத் தாக்கி, முடிகளை மீண்டும் வளரச் செய்கிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த சீரம் பயன்படுத்தப்பட்ட 20 நாட்களுக்குள் அவற்றின் மயிர்க்கால்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி, புதிய முடிகள் வளர ஆரம்பித்தது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண முடி வளர்ச்சியைக் காட்டிலும், இந்த சீரத்தின் மூலம் முடி வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முடி வளர விஞ்ஞானிகள் சோதனை
PT World Digest| அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் TO ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!

இந்த ஆய்வு முடிவுகள் ஆரம்பக் கட்டத்தில் எலிகள் மீது கிடைத்தவை என்றாலும், இது மனிதர்களுக்கான வழுக்கை சிகிச்சையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் மனிதர்களுக்கு உகந்த மருத்துவச் சோதனைகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழுக்கைப் பிரச்சனையால் மனச்சோர்வு அடைந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தச் சீரம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடி வளர விஞ்ஞானிகள் சோதனை
கோவை மாணவி வன்கொடுமை| 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை.. குற்றவாளிகளின் விவரம் வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com