சக்கர வியூகம் 18 | அலறும் பருந்து

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 18-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் - 18
சக்கர வியூகம் - 18PT

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

அத்தியாயம் 18 - அலறும் பருந்து

என்னுடைய மொத்த சேமிப்பையும் பதினெட்டாகப்பிரித்து 18 பிவிஐ நிறுவனங்களைத்தொடங்கினேன். இத்தனை நாள் கண் துடைப்புக்காக எத்தனையோ பேருக்காக துவக்கப்பட்ட இந்நிறுவனங்களை இன்று எனக்காக ஒரு நாள் துவக்கப்போகிறேன் என்று நினைத்துக்கூடப்பார்த்ததில்லை. வீடும், காரும் அலுவலகம் கொடுத்தது. அதை சந்தோஷமாக திருப்பிக்கொடுத்துவிடலாம்.

பின்னால் நீர்வழியில் நிற்கவைத்திருக்கும் போட்களில் மட்டும் ஒன்று என் பெயரில் இருக்கிறது. போனால் என்ன, போகட்டும். ஒரு சிறிய பெட்டியில் முதலில் சில உடைகள், மேக்கப் சாதனங்கள், ப்ளேசர்கள், என்று அடுக்கி வைத்துப்பார்த்தேன். எதுவுமே அர்த்தமற்றதாக இருந்தது. சற்று அதனை உற்றுப்பார்த்து சிரித்துவிட்டு அப்படியே பெட்டியோடு தூக்கி வைத்துவிட்டு எனக்கே எனக்காக ஒரு காவி நிற மேக்சியை மட்டும் என் கைப்பைக்குள் வைத்துக்கொண்டேன்.

சக்கர வியூகம் - 18
சக்கர வியூகம் 15 | பாலைவன நிலா

பிறகு வந்த நாட்கள் என் வாழ்வின் உற்சாகத்தை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்தியிருந்தன. வழக்கமாக அலுவலகத்திற்கு அணியும் ப்ளேசர், பேண்ட் வகையறாக்கள் விடுத்து வண்ண உடைகளை அணிந்து வரலானேன். எல்லோருக்கும் ஆச்சர்யமாயிருந்தது. பல மீட்டிங்குகளை வேண்டுமென்றே கேன்சல் செய்துவிட்டு, அல்லது முடிவுகளை அளிக்கச்சொல்லிவிட்டு ஸ்வாமியின் சொற்பொழிவை தினமும் கேட்க ஓடினேன். பகலில் சம்பந்தமே இல்லாமல் அவரின் அறைக்குச்சென்றேன். யாரிடமோ கார்ட்லெஸ் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தவர், சப்தம் கேட்டு பாதியில் நிறுத்தினார்

“மிருணாளினி, இந்த அழைப்பை முடித்துவிட்டு நானே கீழே வருகிறேன் என்றார்” புன்னகையுடன்.

நானே சமைத்திருந்த அவருடன் இணைந்து மதிய உணவு உண்டேன். அவரின் நகைச்சுவைகள் இப்போது இரண்டு மடங்கு சிரிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் விட்டு விலகி வந்ததாலேயோ என்னவோ மிக்க

மகிழ்வுடன் கவனிக்க முடிந்தது. முன்னை விட ஸ்வாமியின் அருகாமை அதிக சுகந்தமாக இருந்தது. அவரின் உரை முடியும் நாளுக்கு முதல் நாள் எல்லா பிவி ஐ நிறுவனங்களின் அங்கீகாரங்களும் வந்திருந்தன. அவரிடம் சென்று

”நீங்கள் சொன்னபடி நான் தயார் ஸ்வாமி” என்றேன்

சற்று ஏறெடுத்துப்பார்த்து, புன்னகையுடன்

சக்கர வியூகம் - 18
சக்கர வியூகம் 16 | கனவுப்பொழுது

“குட் கேர்ள், என் வார்த்தைக்குக் காத்திரு” என்றுவிட்டு குருஷேத்திரத்தின் கடைசி நாள் உரையை மிகுந்த உணர்வெழுச்சியுடன் சொல்லக்கிளம்பினார். நானும் அவருக்கேற்ற வகையில் புடைவை அணிந்து அவருடன் டிரைவ் செய்யத்தயாரானேன்.

காருக்கு அருகில் செல்லும்போதே மொபைல் வைப்ரேஷன் அழுத்தியது. அது ஷேக்கின் ஹாட்லைன்

சட்டென எழுந்து வெளியில் வந்தேன்.

“மிருணாளினி, சற்றே அவசரமாய் சில டிரான்சாக்‌ஷன்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது. அலுவகத்திற்கு போ,” என்றார்.

வேறு நாளாயிருந்தால் பறந்துகொண்டு போயிருப்பேன், ஏனோ விட்டு விலகியிருந்த மன நிலையில் இந்த அழைப்பு சுமையாக இருந்தது. சுவாமியுடன் இருப்பது என்ற என் மன நிலை இவை எல்லாவற்றையும் மாற்றியிருந்தது.

“ஸ்வாமி, ஷேக் சற்று அவசரப்பணி என்று அழைக்கிறார்”

“போய் வா மிருணாளினி, இந்த நிமிடம் வரையில் நீ இந்த தேசத்தின் பணியாளினி. மறவாதே” என்றார். டிரைவரை அழைத்து அவரை ட்ராப் செய்யச்சொல்லிவிட்டு நான் கிளம்பினேன்.

ஆர்ஜே வழக்கமான புன்னகையோடு கையசைத்தார்.

எவ்வளவோ முறை அவர் புன்னகைகளைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் கடந்த சில நாட்களில் மட்டும் அவர் புன்னகைகளில் சிறப்பு மதுரம் கலந்திருப்பதைப்போல தோன்றியிருந்தது. 120 கிமீ வேகத்தில் பிரதான சாலையில் வண்டியைச்செலுத்தி அலுலகம் வந்தேன்.”

ஃபஹீமா வந்திருந்தாள்.

புடைவையில் என்ன பார்த்தவுடன், “க்யா ரே, ஸ்வாமி கா லெக்சர்?” என்றாள்

“ஆம் என்றேன், என்ன டிரான்சாக்‌ஷன்கள், ஷேக் அவசரமென்றாரே, திடீர்னு என்ன? ”

“நோ ஐடியா. வெரி பிக் டிரான்சாக்‌ஷன்ஸ்” என்றபடியே ஃபேக்ஸை நீட்டினாள். எல்லாம் மில்லியன்களிலும், பில்லியன்களிலும் இருந்ததன. அவ்வளவு சல்லிசாக அதை வெளியில் தள்ள முடியாது, அரசாங்கம் அனுமதிக்காது, இளவரசராக இருந்தாலுமே கூட, ப்ரோட்டாகால்கள் இருக்கின்றன.

சக்கர வியூகம் - 18
சக்கர வியூகம் 17 | ஆபத்துகளின் வாயிலில்

அதைத்தாண்டி எக்கச்சக்கமான ராணுவ உத்தரவுகள் அடங்கிய காகிதங்கள் எல்லாவற்றிலும் சீல்போட்டு கவரேற்ற வேண்டும், சிப்பந்திகள் செய்ய வேண்டிய வேலை. ரகசியம் என்பதால் என் மேசைக்கு வந்திருக்கிறது

எக்கச்சக்கமான சென்சிடிவ் விஷயங்களுக்கு ஒரே மாலையில் என்ன அவசரம் என்ற கேள்வி எழுந்தது.

”ஐ வாண்ட் டு ஸ்பீக் டூ ஷேக் ஃபஹீமா, சம்திங் ஈஸ் நாட் ரைட்” என்றேன்.

அடுத்த நிமிடம் ஷேக் லைனில் வந்தார், “எனக்குப்புரிகிறது மிருணாள், இன்னும் ஒரு மணி நேரத்தில் என் மற்ற சகோதரர்க்ளின் என் ஓ சி வரும். விரிவாக பின்னர் பேசலாம். நீ மற்ற ஃபார்மாலிடிகளை ரெடி செய் என்றார்”

அப்படி என்ன தலைபோகும் அவசரம் என்று புரியவில்லை. வேறு சூழலாக இருந்தால் இதற்கு மட்டுமே பலவிதங்களில் விசாரணை செய்திருப்பேன். இன்றைய மாலையை அடித்து துவம்சம் செய்திருப்பேன். ஷேக்கிடம் பேசி மாற்று ஆலோசனைகள் சொல்லியிருப்பேன்.

ஆனால் இப்போது எல்லாவற்றிலும் விட்டேத்தி மன நிலை வந்திருந்தது. தவிரவும் ஸ்வாமியின் ஒற்றைச்சொல்லுக்காக காத்திருக்கும் இந்நிமிடங்களில் என் கால் கூட தரையில் பாவுவதில்லை.

எல்லா ஃபார்மாலிட்டிகளையும் நிறைவு செய்து, சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை அலர்ட் செய்து வைத்தேன். கர்னலுக்கு ஃபோன் செய்து ஷேக்கை சந்திக்க நேரம் ஒதுக்கிக்கொடுத்தேன்.

ஷேக் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் அவரின் மற்ற சகோதர்களின் என் ஓ சி வந்திருந்தது. எல்லாவற்றையும் இணைத்து டிரான்சாக்‌ஷன்களை ஆக்டிவேட் செய்தேன். அடுத்த 20 நிமிடத்தில் நாட்டின் பொக்கிஷத்தில் பெரும் பகுதி எங்கோ பெயர் தெரியாத, முகம் தெரியாத ஏஜண்டுகளின் கையில் கிளவுட் டெபாடிட்டாக வைக்கப்பட்டது. இனி அரசரும், இளவரசர்களும் திரும்பக்கோரும் வரை அது அந்தரத்திலேயே இருக்கும்.

இருக்கட்டும். இனி அது எங்கு போனால் என்ன என்று நினைத்துக்கொண்டேன். இனி ஆர்ஜேவின் உரைக்குப்போக முடியாது, டிராஃபிக்கில் நீந்திப்போவதற்குள் உரை முடிந்திருக்கும், இன்னொரு டிரைவருக்கு அலைபேசி ஆர்ஜேவை வீட்டுக்கூட்டிக்கொண்டு வரச்சொன்னேன்.

சக்கர வியூகம் - 18
சக்கர வியூகம் 14 | அமானுல்லாவும் ஆர்ஜேவும்

வீட்டுக்குச்சென்று, அலுப்பு தீரக்குளித்தேன். எனக்கு மிகவும் பிடித்த சிகப்பு சாட்டின் இரவுடுப்பை அணிந்துகொண்டேன். அதை எடுக்கும்போதே உள்ளே உள்ளடங்கி வைத்திருந்த “ஸ்க்ரீமிங் ஈகிள் “ ரெட் வைன் கண்ணைச்சிமிட்டியது. எப்போதாவது கனத்து அடங்கிய நாட்களின் அயர்வுக்கு அது அருமருந்து. சில நொடிகள் யோசித்தேன். ”கடைசியாக ஒரு சிப் அருந்தி, உன் சந்நியாசத்தை ஆரம்பியேன்” என்று உள்மனது உந்த, கோப்பைகள் இல்லாமலே போத்தலை சாய்த்துக்கொண்டேன். கண்கள் செருக மனமெங்கும் ஆர்ஜேயின் நீள்வட்ட முகம் பிரகாசிக்க படுக்கையில் விழுந்தேன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com