கேரளா | மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் விடுத்த பகுதி - இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

கேரள மாநிலம் கம்பலை பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற பகுதியில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரள மாநிலம் கம்பலை பகுதி
கேரள மாநிலம் கம்பலை பகுதிமுகநூல்

18 ஆவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 (நேற்று) ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது.

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மிரட்டல்
கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

இதில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக கேரளா வயநாடு பகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலை பகுதியில் “மக்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது” என மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்து எச்சரித்துச் சென்றனர். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் கம்பலை பகுதி
கேரளா | “தேர்தலில் வாக்களிக்க வேண்டாம்!” - மிரட்டிய மாவோஸ்டுகள்... வைரல் வீடியோவால் பரபரப்பு!

இதனை அடுத்து அந்தப் பகுதியில் துணை ராணுவப் படையினர், கேரள மாநில படையினர், உள்ளூர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால், ராகுல் காந்தி, ஆனி ராஜா சுரேந்திரன் போட்டியிடும் தொதியான வயநாடு தொகுதியில் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம் கம்பலை பகுதி
இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் - கேரளாவில் வாக்குப்பதிவின் போது 8 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், 20 தொகுதிகளை கொண்ட கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. அதில் கம்பமலை பகுதியில் மொத்தமுள்ள 1,083 வாக்காளர்களில் 848 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் கம்பமலை பகுதியில் 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுமுகநூல்

சொல்லப்போனால், கம்பமலை பகுதியில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்தும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com