\
Where Was Mahatma Gandhi on India’s Independence Day?
மகாத்மா காந்தி AI

சுதந்திர தினத்தன்று எங்கிருந்தார் காந்தி? கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ஏன்?

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாத்மா காந்தி எங்கு இருந்தார்? என்ன செய்துகொண்டிருந்தார்? என்பது குறித்துப் பார்க்கலாம்.
Published on: 

இந்தியா 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்தைக் கொண்டாடியபோது, மகாத்மா காந்தி டெல்லி சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரிவினையால் ஏற்பட்ட மதக்கலவரங்களால் மனவேதனையடைந்து, கல்கத்தாவின் 'ஹைதரி மன்சில்' இல்லத்தில் தங்கி அமைதி முயற்சியில் ஈடுபட்டார். சுதந்திர தினமான அன்று அதிகாலை 3 மணிக்கே விழித்த மகாத்மா காந்தி, நாள் முழுவதும் 24 மணி நேர உண்ணாவிரதம் இருந்தார். வழக்கம்போல் தனது உடைகளைத் தானே துவைத்து, ராட்டினத்தில் நூல் நூற்று, பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி AI

காலை நேரத்தில் அவரைச் சந்திக்க வந்த புதிய மேற்கு வங்க அமைச்சர்களிடம், "அதிகாரமும் ஆடம்பரமும் உங்களை மயக்கிவிடக் கூடாது" என எச்சரித்தார். மாலை நேரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அன்று மக்கள் காட்டிய சகோதரத்துவத்தைக் கண்டு நெகிழ்ந்த காந்தி, இந்த அமைதி நிலைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சுதந்திர நாளில், காந்தி அமைதிக்காகவும் பிரார்த்தனைக்காகவும் மட்டுமே தன் நேரத்தை முழுமையாக அர்ப்பணித்தார்.

Where Was Mahatma Gandhi on India’s Independence Day?
15 ஆண்டுகளாக பெட்டிகளில் உறங்கும் 2 லட்சம் அரிய புத்தகங்கள்.. மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த 'ஹைதரி மன்சில்' கட்டடம், பின்னாள்களில் 'காந்தி பவன்' எனப் பெயர் மாற்றப்பட்டு அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. காந்தி பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கலவரக்காரர்கள் அவரிடம் ஒப்படைத்த ஆயுதங்கள் அங்கு இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திரத் திருநாளில் காந்தி அமைதிக்காகப் போராடிய அந்த நினைவிடம், வரலாற்றின் ஒரு முக்கிய சாட்சியாகத் திகழ்கிறது.

Where Was Mahatma Gandhi on India’s Independence Day?
SIR நடவடிக்கை.. 2015-ம் ஆண்டுக்கு சென்ற வாக்காளர் எண்ணிக்கை.. வெளியான அறிக்கை!! முழு விபரம் உள்ளே
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com