மேற்கு வங்கம்|வாக்குச்சாவடிகளில் வன்முறை.. குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்.. #ViralVideo

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி ஒன்றில், ஓட்டுச்சாவடியை சூறையாடிய வன்முறையாளர்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை தூக்கிச் சென்று குளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க காட்சிகள்
மேற்கு வங்க காட்சிகள்எக்ஸ் தளம்

மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழாவதுகட்டமாக இன்று (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள டம்டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா உள்ளிட்ட ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் பதற்றம் நிலவுகிறது.

குறிப்பாக, கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் உள்ள பங்கரில் உள்ள சதுலியா பகுதியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) மற்றும் சிபிஐ(எம்) ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலின்போது ISF அதிகாரிகள் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

மேற்கு வங்க காட்சிகள்
மேற்கு வங்கம்: பாஜக எம்பியின் முத்த சர்ச்சை.. பாதிக்கப்பட்ட மாணவி பதில்!

அடுத்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலியில், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, வாக்குச்சாவடிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) கைப்பற்றி அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளது. இதனால், கோபமடைந்த உள்ளூர்வாசிகள் விவிபேட் இயந்திரத்தை சேதப்படுத்தினர். சில வாக்குச்சாவடி முகவர்கள், சாவடிகளுக்குள் நுழைவதைத் தடை செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் குல்தாலியில் உள்ள இதர சாவடிகளில் தேர்தல் பணிகள் தங்குத் தடையின்றி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே மாவட்டத்தில் உள்ள கேனிங்கிலும் பதற்றம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இட்கோலா கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் TMC மற்றும் BJP ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாகவும், இதில் ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, நேற்று பாசிர்ஹாட் தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காலியில் பதற்றம் ஏற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீசார் மிரட்டுவதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

மேற்கு வங்க காட்சிகள்
மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com