#WestBengalElectionResults | தொடர்ந்து பாஜக முன்னிலை.. மம்தாவுக்கு பின்னடைவு!
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும் (முறைகேடுகள் தொடர்பாக ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடைபெற இருக்கிறது) ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இங்கு பெரும்பான்மைக்கு 148 இடங்கள் என்கிற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு, தற்போதைய நிலவரம் குறித்து அறியலாம்..
மேற்கு வங்கத்தில் பாஜக 182 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதைவிட திரிணாமூல் காங்கிரஸ் 107 இடங்களிலும் பின்தங்கி உள்ளது.
மேலும், பவானிபூரில் மமதாவை முந்தி சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பச் சுற்றுகளில், பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கும், பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கும் இடையே முன்னிலை மாறிமாறி வந்துக் கொண்டிருக்கிறது. காலை 10.33 மணி நிலவரப்படி, சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார். இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,000-க்கும் குறைவாகவே உள்ளது.

