ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.
ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.pt web

மாநிலங்களவை: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளால் வெடித்த சர்ச்சை.. யாருடையது என்பதில் நீடிக்கும் மர்மம்!

பாதுகாப்பு சோதனையின் போது மாநிலங்களவையில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
Published on

மாநிலங்களவையில் 500 ரூபாய் நோட்டுகள்

பாதுகாப்பு சோதனையின் போது மாநிலங்களவையில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ரூபாய் நோட்டுகள் யாருடையவை என்பது மர்மமாக உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது தங்களுடைய பணம் என கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை மாநிலங்களவை அமர்வு நிறைவடைந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய போது காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். சோதனையின் போது இருக்கை எண் 222-ல் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.
“குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை” - சக்திகாந்த தாஸ்

அபிஷேக் மனு சிங்வி சொல்வதென்ன?

கண்டெடுக்கப்பட்ட ரொக்கம் எத்தனை ரூபாய் என்பது தெரிவிக்கப்படாத நிலையில், இது ஊழலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விட்டு சென்ற பணமாக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சூசகமாக குற்றம்சாட்டி வருகின்றனர். யாருடைய பணம் என தெரியாத நிலையில், அபிஷேக் மனு சிங்வி பெயரை அவையில் குறிப்பிட்டது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.

அபிஷேக் மனு சிங்வி
அபிஷேக் மனு சிங்வி

இதற்கிடையே “நான் நாடாளுமன்றத்துக்கு வரும்போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே கொண்டு வருவது வழக்கம்” என குற்றச்சாட்டுக்கு அபிஷேக் மனு சிங்வி பதில் அளித்துள்ளார்.

மேலும், “நேற்று நான் 12.57-க்கு மாநிலங்களவைக்குள் நுழைந்தேன். ஒரு மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, அரை மணி நேரம் உணவகத்தில் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினேன். இருக்கையில் வேறு யாரோ ரொக்க பணத்தை வைத்து தன் மீது பழி போடுகிறார்கள். இனி உறுப்பினர்களின் இருக்கைகளை மூடி, பூட்டு போட ஏற்பாடு செய்ய வேண்டும்” என அபிஷேக் மனு சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.
”அரசியல் சாயம் பூசப்படும்.. குழப்பத்தை உண்டாக்கும்” திருமாவளவன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி

திசை திருப்பும் நடவடிக்கைகள்

ரொக்க பணம் எப்படி இருக்கை எண் 222-க்கு வந்தது என்பதை கண்டறிய மாநிலங்களவை தலைவரான ஜெகதீப் தங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முழு உண்மையை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு குறிப்பிட்ட நிலையில், இது வெட்ககரமான விவகாரம் என மத்திய அமைச்சர் ஜே பி நட்டா வலியுறுத்தினார்.

“விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை. விசாரணை முடிந்து உண்மைகள் வெளிவரும் முன்னே அபிஷேக் மனு சிங்வி பெயரை குறிப்பிட்டது தவறு” என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார். மேலும் “மாநிலங்களவைக்கு பணம் கொண்டு வருவது தவறா? அதானி குழும ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை திசை திருப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஜெகதீப் தங்கர்
ஜெகதீப் தங்கர்

முன்னதாக அதானி குழும ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்ற குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலம் நடத்தினர். எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிக்காமல் வாய்ப்பூட்டு போடப்படுகிறது என வலியுறுத்தும் வகையில் கருப்பு நிற வாய் கவசங்களை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள். இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் என்பதால் அரசியல் சாசனத்தின் நகல்களை கைகளில் ஏந்திய படி நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலம் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்துக்கு மலர் மரியாதை செய்தனர்.

ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.
அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் மற்றும் மக்களவையில் ரொக்கம் கிட்டிய விவகாரம் என அதானி ஊழல் விவாதத்தை தடுக்க முயற்சி செய்யப்படுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட “INDIA” கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அமெரிக்க செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் பிரச்சாரங்களை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பரப்புவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியதை தொடர்ந்து, மக்களவைத் தொடர்ச்சியாக முடங்கி வருகிறது.

மக்களவை
மக்களவைஎக்ஸ் தளம்

இன்றும் ஜார்ஜ் சோரோஸ்-காங்கிரஸ் தொடர்பு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் நிஷிகா தூபே பேச முற்பட்டபோது, காங்கிரஸ் கட்சியினர் எதிர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கடும் அமளி உண்டாகி மக்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மாநிலங்களவையும் தொடர் முழக்கங்களால் நாள் முழுவதம் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய மோதல் போக்கு காரணமாக அடுத்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல்கள் நடைபெறுமா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

ஜெகதீப் தங்கர், அபிஷேக் மனு சிங்வி.
கீப்பர்... ஓவர்சீஸ் பௌலர்... கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com