வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் | எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் நீக்கம்?
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளை கடந்த 2025ஆம் ஆண்டு தேர்தல ஆணையம் தொடங்கியது. முதற்கட்டமாக, பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டது. அப்போது, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களர்களை நீக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு, அதை தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி முடித்திருக்கிறது. இந்த நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எஸ்.ஐ.ஆர் பணிகளில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ் 12 மாநிலங்களில் 6 கோடியே 59 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 12.93% ஆகும். உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 18.72% பேர் நீக்கப்பட்டுள்ளனர், தமிழ்நாட்டில் 15.13% பேரும், குஜராத்தில் 14.52% பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் 12.9% பேரும் புதுச்சேரியில் 10.09% பேரும் அந்தமானில் 8.66% பேரும் நீக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 8.6% பேரும் கோவாவில் 8.52% பேரும் நீக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 7.6% பேரும் மத்தியப் பிரதேசத்தில் 7.44% பேரும் நீக்கப்பட்டுள்ளனர். லட்சத்தீவுகளில் குறைந்தபட்சமாக 2.79% பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

