மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு To நாகலாந்தில் புறக்கணிப்பு - இந்திய அளவில் வாக்குப்பதிவு எப்படி?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வாக்கு சதவீதம்
வாக்கு சதவீதம்முகநூல்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.

தமிழகம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, சிக்கிம் நாகலாந்து, மிசோரம், புதுச்சேரி, அந்தமான், லச்சதீவு உள்ளிட்ட மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 60 விழுக்காடுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்றதால் பதற்றமான சூழல் நிலவியது.

மணிப்பூரின் Bishnupur மாவட்டம் Thamnapokpi என்ற இடத்தில், ஆயுதமேந்திய நபர்கள், திடீரென புகுந்து பல சுற்றுகள் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வாக்காளர்கள் அச்சத்துடன் அங்கிருந்து விலகி ஓடினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதேபோல வெவ்வேறு இடங்களில் ஒரே கட்சியைச் சேர்ந்த நபர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து வாக்களிக்க விடாமல் வாக்காளர்களை விரட்டியடித்தனர்.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள Uripok மற்றும் Iroishemba பகுதிகளிலும் இதேபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. Iroishemba -வில், வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்துநொறுக்கினர். இதேபோன்று இம்பால் கிழக்கு மாவட்டத்திலும் துப்பாக்கி ஏந்திய கும்பல் வந்து காங்கிரஸ் பூத் ஏஜென்டுகளை விரட்டியடித்தனர்.

வாக்கு சதவீதம்
தேர்தல் 2024 | மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; அலறிய மக்கள்!

இதேநேரம் குக்கி சமூக மக்கள் அதிகம் உள்ள இடங்களில் வாக்குப்பதிவு மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. வித்யாசமாக, குக்கிக்கள் அதிகம் வாழும் Churachandpur மாவட்டத்தில் வாக்கு சதவிகிதம் அதிக அளவில் இருந்தது.

கூட்டாக தேர்தலை புறக்கணித்த நாகலாந்து மக்கள்!

நாகாலாந்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரு வாக்குகூட பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

இதன் பின் உள்ள கோரிக்கை 2010 ஆம் ஆண்டில் இருந்து நீடிக்கிறது. தனி மாநிலம் கேட்டு கிழக்கு நாகாலாந்து மக்கள் முன்னணி அமைப்பு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

Chang, Konyak, Sangtam, Phom, Yimkhiung, Khiamniungan மற்றும் Tikhir ஆகிய ஏழு நாகா பழங்குடி மக்கள் ஆறு மாவட்டங்களில் இருக்கிறார்கள்.

இவர்கள் தனி மாநிலம் கேட்டு 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆறு மாவட்டங்களும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக இவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

வாக்கு சதவீதம்
நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

இந்நிலையில், இங்குள்ள 4 லட்சத்திற்கும் அதிக வாக்காளர்களில் ஓருவர் கூட, மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் நிலைமை மிகவும் அமைதியாக காணப்பட்டது. இதையடுத்து வாக்களிப்பவர்களை தவறாக வழிநடத்துவதாக கூறி நாகாலாந்து தேர்தல் அதிகாரி புகார்அளித்துள்ளார்.

மாநில வாரியாக வாக்கு சதவீதம் ?

  • புதுச்சேரி- 78 .80%

  • நாகலாந்து - 56.91%

  • அருணாசலபிரதேசம் - 72 .74%

  • மிசோரம் 56.60%

  • மேகாலயா- 74. 50%

  • சிக்கிம் - 80.03%

  • ராஜஸ்தான் 12 தொகுதிகளில் - 57.26%

  • உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகளில்- 60.25%,

  • மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில்- 67.08

  • மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் - 80.55%

வாக்கு சதவீதம்
HeadLines Today|தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு? To ஏற்றமதி செய்யப்பட்ட ஏவுகணை

யூனியன் பிரதேசங்களான

  • அந்தமான் நிகோபர்- 63.99%

  • லட்சத்தீவில் 83.88%

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com