தேர்தல் 2024 | மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; அலறிய மக்கள்!

இந்தியாவில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் நடைப்பெற்றுவரும் சூழலில், மணிப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிறைந்த சூழல் காணப்படுகிறது.
மணிப்பூர்
மணிப்பூர்புதிய தலைமுறை

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று (19.4.2024) காலை 7 மணி முதலே இந்தியாவில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும், தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுவருகிறது.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு
மக்களவை தேர்தல் 2024 | வாக்குபுதிய தலைமுறை

இதில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று காலை முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மணிப்பூரை பொறுத்தவரை உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் என 2 தொகுதிகள் உள்ளன. அந்தவகையில், உள் மணிப்பூர் தொகுதியிலும், வெளி மணிப்பூர் தொகுதியிலும் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

மணிப்பூர்
🔴LIVE | விறுவிறுப்பாக நடைபெறுகிறது மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு...!

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மணிப்பூரில் இன்று காலை முதலே வெவ்வேறு இடங்களில் வன்முறை பதிவாகியுள்ளது. குறிப்பாக இம்பால் பள்ளத்தாக்கில் ஒரு சில வன்முறை சம்பங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

போலவே மணிப்பூர் மாநிலம் விஷ்ணுப்பூரில் ஒரு வாக்குச்சாவடியை கைப்பற்ற வந்த மர்மநபர்கள் சிலரை கலைப்பதற்காக போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

மணிப்பூர்
“சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” - பிரதமர் மோடி வேண்டுகோள்

இதனைத் தொடர்ந்து தெற்கு பகுதியில் உள்ள மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியை கைப்பற்றுவதற்காக போராளி இயக்கத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு நிலவியதால், அங்கு வாக்களித்து கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com