\
vijays tvk opens first party office in west bengal
VijayANI

நிறைவேறுமா பிரதமர் கனவு.. தேசிய அரசியலை நோக்கி விஜய்..? வடக்கிலும் கால்பதித்த தவெக!

மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் த.வெ.க கிளைகளைத் தொடங்கி சமூகப் பணிகளை முன்னெடுப்பது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், மொழி மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டி பிற மாநில மக்களிடம் அரசியல் ரீதியான நம்பிக்கையைப் பெறுவது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகும்.
Published on: 

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேசிய அளவில் தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வடமாநிலங்களில் த.வெ.க காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் த.வெ.க தனது முதல் மாநிலக் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் அவர் முதல்வரானதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் அவரது பெயரது பிரபலமாகி வருகிறது. இதையடுத்து, அவரைப் பிரதமராக்க வேண்டும் என்ற கனவில் அவரது ஆதரவாளர்கள் முழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக, சமீபகாலமாக காங்கிரஸுக்கும் தவெகவுக்கும் இடையே கருத்து மோதலும் நிலவி வருகிறது.

Vijay
VijayPTI

இந்த நிலையில்தான், வடக்கில் முதற்கட்டமாக தவெக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வெற்றிக்குப் பின், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேசிய அளவில் தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. த.வெ.க தலைவர் விஜயை தேசிய அரசியலிலும் முதன்மைப் புள்ளியாகவும் பிரதமராகவும் முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கில், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாள்தோறும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இதற்காக, தென்னிந்தியாவையும் தாண்டி பிற மாநிலங்களிலும் அதன் கட்சி அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் தொண்டர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

vijays tvk opens first party office in west bengal
RTI சட்டம் ஒழுங்கு விலக்கு.. எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள்.. வாபஸ் பெற்றது தவெக அரசு!!

இதன் முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் த.வெ.க தனது முதல் மாநிலக் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்தத் திறப்பு விழா நிகழ்வில் கட்சியின் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைதாலி ராய் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைத் தொடர்ந்து, பன்கூரா, புருலியா, பிர்பூம் போன்ற அண்டை மாவட்டங்களிலும் த.வெ.க அமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தில் உடனடியாக நேரடி அரசியல் போட்டியில் இறங்குவதைக் காட்டிலும், நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகள் மூலமாகப் பொதுமக்களைச் சென்றடைவதே தங்களின் முதன்மை இலக்கு எனத் த.வெ.க தலைமை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் த.வெ.க கிளைகளைத் தொடங்கி சமூகப் பணிகளை முன்னெடுப்பது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், மொழி மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டி பிற மாநில மக்களிடம் அரசியல் ரீதியான நம்பிக்கையைப் பெறுவது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகும். ஒருவேளை, எதிர்காலத்தில் அத்தகைய தேசிய அரசியல் சூழல் உருவாகும்போது, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மையப் புள்ளியாக உருவெடுத்தால் மட்டுமே இத்தகைய வாய்ப்புகள் சாத்தியப்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

vijays tvk opens first party office in west bengal
தவெக Vs திமுக.. மிசா விவகாரத்தைக் கையில் எடுத்த IT WINGS.. ஜெயித்தது யார்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com