“கடவுள் எங்களுக்கு எந்த ஆசிர்வாதத்தினையும் வழங்கவில்லை.. படிப்புதான் முக்கியம்!” #ViralVideo

”கடவுள் எங்களுக்கு எந்த ஆசிர்வாதத்தினையும் வழங்கவில்லை, கோவில்களைவிட பள்ளிக்கூடங்களுக்கு செல்வதுதான் முக்கியம். கல்விதான் எங்களுக்கு வேலையை பெற்றுதரும்” - என உத்தரப்பிரதேசத்தினை சேர்ந்த சிறுவன் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச சிறுவன்
உத்தரப்பிரதேச சிறுவன்முகநூல்

உத்தரப்பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் எஸ்எம் என்ற செய்தி நிறுவனத்தினை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கல்வியை குறித்தும், சாதியை குறித்தும் கேட்ட கேள்விக்கு அச்சிறுவன் அளித்த பதில் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பே (மார்ச் 2022-ல்) வெளியான இந்த வீடியோ, தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

அயோத்தியில் ரூ. 1,800 கோடி மதிப்பில் நேற்று ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த விமர்சனங்களும் வரவேற்பும் ஒருசேர எழுகின்றன. இந்நிலையில்தான் இச்சிறுவனின் காணொளி வைரலாகிறது.

உத்தரப்பிரதேச சிறுவன்
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிறைவு... குழந்தை ராமரின் கண்கள் திறக்கப்பட்டன
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்File image

அந்த வீடியோவில் வரும் செய்தியாளர் அச்சிறுவனிடம், “பெரியவனாகி நீ என்ன செய்ய போகிறாய்?” .. என்று கேட்கிறார்.

அதற்கு அச்சிறுவன், நான் வளர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்புகிறேன். அதற்காக யு.பி.எஸ்.சி படிக்கப்போகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர், சிறுவன் இடையே நீள்கிறது உரையாடல்...

செ - “கோயில்கள் முக்கியமா? பள்ளிக்கூடங்கள் முக்கியமா?”...

சி - “பள்ளிக்கூடங்கள்தான் முக்கியம்

“கோவில்களுக்கு செல்லவில்லையென்றால்... எவ்வாறு ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆக முடியும்?”

நான் கோவில்களை காட்டிலும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்குதான் முக்கியத்துவம் தருவேன். தினமும் கோவிலுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று படித்தாலே யு.பி.எஸ்.சி பாஸ் செய்துவிடலாம்

“நல்ல வாழ்க்கைக்கு கடவுளின் ஆசி முக்கியம் என்றுதானே மக்கள் தினமும் அவரை வணங்குகின்றனர்...”

அவர்கள் முட்டாள்கள். நான் என் தாய், தந்தை, ஆசிரியரையே வணங்குவேன்

உத்தரப்பிரதேச சிறுவன்
`படிப்புதான் பிள்ளைகளுக்கான சொத்து...’- 100 வயதில் துடைப்பம் விற்று டொனேஷன் வழங்கிய சீனர்!

“நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர்...”

சிறுவன் ஒரு சாதியின் பெயரை சொல்கிறார். அது பட்டியலின வகுப்பை சேர்ந்து வருகிறது. செய்தியாளர் தொடர்ந்து,

நீங்கள் அந்த சமூகத்தினை சேர்ந்தவர் என மிகவும் பெருமையுடன் கூறுகிறீர்களே...இந்தியாவை பொறுத்தவரை இந்தச் சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியின் கீழ் அட்டவணைப்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பெயரில் அழைக்கப்படுவதே இந்தியாவில் இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தடைசெய்யப்பட்டாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் உயர் சாதிருக்கு என்று தனி அடையாளம் வழங்கப்படுவதும் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவராகவும், வேலை வாய்ப்புகளில் மட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் கையாளப்படுகிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?”

“ஆம். சொல்வேன். ஏனெனில் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் உரிமை, இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்பு சட்டத்தினை வழங்கியிருக்கிறார். அதனால் நாங்கள் யார் என்பதை பெருமையுடன் நிச்சயம் சொல்வோம். கடவுள் ராமர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அம்பேத்கார்தான் எங்களுக்கு செய்தார். இந்தக் காரணத்திற்காகத்தான் நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன்..”

“எனில் நீங்கள் கோயில்களுக்கு செல்ல மாட்டீர்களா?”

இல்லை. அந்த நேரத்தில் பள்ளி சென்று புதிதாக எதையாவது கற்பேன். எங்கள் ஊரில் யாரும் கடவுளை வணங்குவதில்லை. கோயில்களே எங்கள் பகுதியில் கிடையாது

“உங்களுக்கு எத்தனை வயதாகிறது?”

13 வயதாகிறது

“இந்த சிறுவயதில் எப்படி இவ்வளவு அறிவாக இருக்கின்றீர்கள்?”

செய்தியாளர்

“ஏனெனில் நான் பள்ளிக்கு செல்கிறேன்”

சிறுவன்

“ஒருவேளை நீங்கள் பள்ளி செல்லாமல் கோயில்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?”

நான் கோயில் வாசலில் 2 ரூபாய், 5 ரூபாய் யாசகம் பெறவேண்டிய நிலை ஏற்படும்... வேறென்ன நடக்கும்? கோயில்களில் நேரத்தை வீணடிப்பதற்கு பதில் பள்ளிக்கு சென்றால் படிக்கவாவது செய்யலாமே

என்று பதிலளித்துள்ளார். இன்னும் கூட சுவாரஸ்யமாக இந்த நேர்காணல் நீள்கிறது. அதை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்லாம்

ஏற்கெனவே வெளியான இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சிறுவனின் இந்தப் புரிதல், கல்வியின் மீது உள்ள ஆர்வம், ‘கல்விதான் சாதி போன்ற தீண்டாமை என்னும் கொடிய நோயை அழிப்பதற்குரிய சரியான ஆயுதமும் கேடயமும்’ என்பதை உணர்ந்த பகுத்தறிவு பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது என்று நெட்டிசன்களால் கூறப்பட்டுவருகிறது.

சாதியின் பெயரால் நடக்கும் கொடூர நிகழ்வுகளும், மரணங்களும், ஒடுக்குமுறைகளும், பறிக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைகளும் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். வளர்ந்து வரும் சிறார்களின் மனதில் பல வடிவங்களில் மறைமுகமாக புகுத்தப்படும் இதுபோன்ற விஷ விதைகள், இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கல்வி ஒன்றுதான் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை பசுமரத்தாணிப்போல பதிய வைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கல்வி மட்டுமே பிறப்பால் மனிதர்களால் சித்தரிக்கப்பட்ட ஏற்றதாழ்வுகளையும், தீண்டாமைகளையும் தகர்த்தெரிவதற்கான புரிதலை வழங்கும்.

செய்யும் தொழிலாலோ பிறப்பாலோ யாரும் யாருக்கும் இங்கு சளைத்தவர்களும் கிடையாது. இந்த சமுதாயத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை ஒருவர் ஏற்படுத்த வேண்டுமானால் .... தற்கான தாரக மந்திரம், கல்வி!

கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்!

என்ற அம்பேத்கரின் வரிகள்தான் இந்த சிறுவனின் பேச்சை கேட்கும் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com